For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா குடியரசு நாடானது எப்போது? மக்கள் அளித்த சுவாரசியமான பதில்கள்.. கலக்கல் வீடியோ!

இந்தியா எப்போது குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது என்பது தொடர்பாக மக்களிடம் ஒன்இந்தியா தமிழ் சார்பாக கேட்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா குடியரசு நாடானது எப்போது? மக்கள் அளித்த சுவாரசியமான பதில்கள்.. கலக்கல் வீடியோ!

    சென்னை: இந்தியா எப்போது குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது என்பது தொடர்பாக மக்களிடம் ஒன்இந்தியா தமிழ் சார்பாக கேட்கப்பட்டது. இதற்கு மக்கள் சுவாரசியமான பதில்களை அளித்தனர்.

    நாட்டின் 70வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    When did India become a Republic country: Peoples hilarious answers

    ஜனவரி 26ம் தேதி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றுவார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

    அதேபோல் செங்கோட்டையில் கொடி ஏற்றும் பிரதமர் மோடி மக்கள் முன்னிலையில் முக்கியமான உரை நிகழ்த்துவார். நாடு முழுக்க அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள் சட்டமன்றங்களில் கொடி ஏற்றுவார்கள். இந்த இந்திய குடியரசுத் தினம் குறித்து, மக்களிடம் ஒன்இந்தியா சார்பாக கேள்வி கேட்கப்பட்டது.

    ஜனவரி 26ம் தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. 1950ல் இந்தியா குடியரசு நாடானது. இதுகுறித்து மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா எந்த வருடத்தில் குடியரசு ஆனது என்று கேட்கப்பட்டது. இதற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் பலரும் தவறான பதிலை சொன்னார்கள்.

    பலர் இந்தியா சுதந்திரம் பெற்ற வருடமான 1947ஐ, இந்தியா குடியரசு பெற்ற வருடமாக குறிப்பிட்டனர். இன்னும் சிலர் 1960ல் இந்தியா குடியரசு பெற்றது, 1952ல் குடியரசு பெற்றது என்றெல்லாம் கூட தவறாக பதில் சொன்னார்கள். பின் 1950ல் தான் இந்தியா குடியரசு பெற்றது என்றவுடன் தவறை திருத்திக் கொண்டார்கள்.

    இந்த ஜாலியான சூப்பர் வீடியோ கண்டுகளித்திடுங்கள்!

    English summary
    When did India become a Republic country: People's hilarious answers - Video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X