For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ., சசி சொத்துக்கள் பறிமுதல்.. எந்தெந்த மாவட்ட சொத்துக்கள் பறிபோகின்றன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய எந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய எந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1991-96-ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

Where are the assets of Jaya, Sasi and others

அபராதத் தொகையை வசூலிக்க அவர்கள் 4 பேரது சொத்துகளை முடக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.

அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
The process to confiscate the properties belonging to former Tamil Nadu chief minister, Jayalalithaa have begun. What are that 6 districts?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X