For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்கா ஊழல் தொடர்பாக யாருடைய வீடுகளில் எல்லாம் சிபிஐ ரெய்டு? முழு பட்டியல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, இதேபோல பாண்டிச்சேரி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் என்று சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் குட்கா முறைகேடு தொடர்பாக, சோதனை நடத்தினர்.

தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ள இந்த ரெய்டு சம்பவத்துக்கு இன்று மாலை சிபிஐ தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Where CBI raids over gutka scam? list is here

சிபிஐ ரெய்டு கீழ்க்கண்டவர்கள் வீடுகளில் நடந்தது:

  • அமைச்சர் விஜயபாஸ்கர்
  • டிஜிபி ராஜேந்திரன்,
  • சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்,
  • முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா,
  • தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத்,
  • மதுரை ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன்,
  • விழுப்புரம் டிஎஸ்பி சங்கர்,
  • மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன் லட்சுமி நாராயணன் சிவகுமார்,
  • விற்பனை வரி அதிகாரிகள் பன்னீர்செல்வம் குறிஞ்சி செல்வம் கணேசன்,
  • மத்திய கலால் துறை அதிகாரிகள் குல்சார் பேகம் ஆர்கே பாண்டியன் சேஷாத்திரி,
  • ஜெயம் நிறுவன இயக்குனர்கள் மாதவ்ராவ் உமா சங்கர் குப்தா ஸ்ரீனிவாஸ் ராவ்.

English summary
Where CBI raids over gutka scam and who are the accused, here is the full report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X