For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரு சிறையில் திடீரென சிவப்பு சேலையில் சசிகலா.. கைதிகள் 'ஷாக்'...பரபர பின்னணி

பெங்களூரு சிறையில் தண்டனை கைதிகளுக்கான வெள்ளை சேலைக்கு பதில் திடீரென சிவப்பு சேலையில் நடமாடுவதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரு சிறையில் கைதிகளுக்கான வெள்ளை சேலைக்கு பதில் திடீரென சசிகலா சிவப்பு சேலையில் நடமாடுவதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனையை பெங்களூரு சிறையில் அனுபவித்து வருகிறார் சசிகலா. சசிகலா கைதிகளுக்கான வெள்ளை சேலைதான் உடுத்த வேண்டும்.

இந்த வெள்ளை சேலையை அவரது உறவினர்கள் வாங்கி அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

நடராஜனுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததால் ஏற்கனவே 10 நாட்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றார். பின்னர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் பெங்களூருக்கு போய் சசிகலாவை சிறைக்கு வழி அனுப்பிவைத்தார்.

விரக்தி

விரக்தி

அதைத் தொடர்ந்து டெல்லி சென்று சில லாபிகளில் ஈடுபட்டுப் பார்த்தார் நடராஜன். ஆனால் எதுவும் கை கொடுக்காததால் விரக்தி அடைந்திருந்தார் நடராஜன்.

மீண்டும் பிரச்சனை

மீண்டும் பிரச்சனை

இந்த நிலையில் திடீரென நடராஜனுக்கு கல்லீரல் பிரச்சனை கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாம். இதனால் அவர் மீண்டும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

வெள்ளை புடவை தோஷம்

வெள்ளை புடவை தோஷம்

இது சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். இதனிடையே சிறையில் சசிகலா வெள்ளை புடவை அணிவதால் ஏற்படும் தோஷம்தான் நடராஜனை தாக்குகிறது; அதனால் சிவப்பு சேலை கட்டினால் சரியாகிவிடும் என சசிகலாவுக்கு ஜோதிடர்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

சிறையில் சிவப்பு சேலை

சிறையில் சிவப்பு சேலை

அதேபோல் போயஸ் கார்டனில் 2 சிவப்பு சேலைகள் வைத்து பரிகாரங்களும் செய்யப்பட்டனவாம். இந்த பரிகார சிவப்பு சேலைகளை சிறை நிர்வாகத்தின் அனுமதியுடன் சசிகலா உடுத்தி வருகிறார் என்கின்றன போயஸ் வட்டாரங்கள்.

English summary
According to sources said that Sasikala wearing Red Saree instead of White Saree in Bangalore Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X