For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னதான் போலீஸ் வலை வீசினாலும்.. நித்திக்கு குசும்பு போகலையே.. டிவிட்டரில் போட்ட குபீர் போல்!

"திரும்பி வரும்போது அடுத்த பிரதமர் யார்" என்று நித்தியானந்தா கேள்வி கேட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸ் ஒருபக்கம் வலைவீசி தேடி கொண்டிருக்கும்போது, நித்தியானந்தா ஜாலியாக ஒரு கருத்துகணிப்பு நடத்தி கொண்டிருக்கிறார் ட்விட்டரில்! அதில் அவர் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் தந்த ஆப்ஷன்களும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

பணமோசடி, பாலியல் புகார், ஆள்கடத்தல் என ஏராளமான வழக்குகளுடன் சர்ச்சைகளாலும் பின்னி பிணையப்பட்டவர்தான் சாமியார் நித்யானந்தா.

சமீபத்தில்கூட குஜராத்தில் நடத்தி வந்த ஆசிரமம் வெளியேற்றப்பட்டு எல்லோருமே வெளியேற்றப்பட்டனர். அந்த ஆசிரம நிர்வாகிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.. ஆனால் நித்யானந்தா மட்டும் தலைமறைவாக உள்ளார்.

வீடியோ

வீடியோ

அவரை பிடிக்க கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டாலும், அந்த காலக்கெடுவும் முடிந்தே போய்விட்டது.. கைது செய்ய போலீசார் தீவிரமாக முயன்று வந்தாலும், யூடியூப் வீடியோ மூலம் தினம் ஒரு தரிசனம் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது போக தாம் உருவாக்கி வரும் கைலாசா நாடு ரெடியாகிவிட்டது என்றும் தெரிவித்து வருகிறார்.

கைலாசா

கைலாசா

இந்நிலையில், தான் இந்தியாவுக்கு திரும்பும்போது பிரதமராக யார் இருக்க முடியும் என்று ஒரு கேள்வியை எழுப்பி, அதை தனது பிஎம்ஓ கைலாசா (கைலாசா பிரதமர் அலுவலக அபீஷியல் டிவிட்டர் ஹேன்டிலாம் இது) ட்விட்டர் அக்கவுண்டிலும் நித்யானந்தா பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டருக்கு கருத்து கேட்டு வாக்களிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சசிகலா

சசிகலா

நித்தியானந்தா 4 ஆப்ஷன்களை தந்துள்ளார். டிரம்ப், ராகுல்காந்தி, நரேந்திரமோடி, சசிகலா என 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளார். இதற்கு டிரம்பு என்பதற்கு 11.2 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு 22.3 சதவீதம் பேரும், மோடிக்கு 38.1 சதவிகிதமும், சசிகலாவுக்கு 28.4 சதவிகிதமும் வாக்குகள் விழுந்துள்ளன.

டிரம்ப்

டிரம்ப்

நித்தியானந்தா முதலில் இப்படி ஒரு கருத்து கணிப்பு ஏன் நடத்தினார் என்று தெரியவில்லை.. "இனி தமிழ்நாட்டுக்கே வரமாட்டேன்.. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் செத்துட்டேன்" என்று சொன்னவர் நாடு திரும்பி வந்தால் யார் பிரதமர் என கேட்டுள்ளது குழப்பதை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, இந்த ஆப்ஷனில் டிரம்ப் எப்படி வந்தார் என்றே தெரியவில்லை.. அவர் இந்திய குடிமகனே இல்லாதபோது, எப்படி பிரதமராக அங்கீகரிக்க முடியும், அதைவிட ஆச்சரியம் 11.2 பேர் அதற்கு ஓட்டு போட்டு வைத்துள்ளதுதான்!

அதிர்ச்சி

மூன்றாவது சோகம் ராகுல்காந்திதான்.. தேசிய கட்சியின் பொறுப்பில் உள்ள மிக மிக குறைவான வாக்குகளை பெற்றுள்ளார், ஆனால் சசிகலாவுக்கு 28.4 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. பிரதமராகும் அளவுக்கு சசிகலாவுக்கு ஆதரவு உள்ளதா? பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் சசிகலாவை மக்கள் நிறுத்தி பார்க்கிறார்களா? இது எப்படி சாத்தியமாகிறது? தமிழ்நாட்டுக்கு என்றால்கூட ஓரளவு ஒத்து கொள்ளலாம், ஆனால் பிரதமர் ரேஞ்ச் என்றால் இதையெல்லாம் அரசியல் கூத்து என்று சொல்வதைவிட வேறு என்ன சொல்வது?

திருமண பேனர்

ஆனால் ஒருசிலர், "நீங்கதான் இந்தியாவின் அடுத்த பிரதமர்' என்று நக்கல் செய்துள்ளனர்.. அந்த வகையில் பார்த்தால், நித்தி நடத்திய இந்த கணிப்பு நகைப்புக்குரியதே.. யாரோ சில இளைஞர்கள் திருச்சியில் தங்கள் வீட்டு கல்யாணத்தில் நித்தியானந்தா ஃபிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.. அதை எடுத்து வந்து தன்னுடைய ட்வீட்டில் போட்டு, மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார் நித்தி.. இவ்வளவுதான் அவரது முதிர்ச்சி என்றுதான் நினைக்க வேண்டி உள்ளது.

கவுண்மணிட பாஷையில் சொல்வதனால்.. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையே!

English summary
Who can be a Prime Minister when i will return back to india, nithiyandas poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X