For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது.. துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? கமல் ஆவேசம்

தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது-கமல் ஆவேசம்-வீடியோ

    சென்னை: தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டது யார் என்றும் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

    who gave permission for firing?: Kamal

    மேலும் அவர் பேசியதாவது, தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது.
    துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

    ஸ்டெர்லைட் நிறுவனம் சட்டத்தை மதிக்காமல் நடக்கிறது. தூத்துக்குடியை மாசுபடுத்தி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை.

    மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது மட்டும் போதாது அரசும் அமைதி காக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ரஜினி மக்கள் மன்றம் டிவிட்டர் பக்கத்தில் அட்மின் மூலம் கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த் போலீசார் குறித்து வாய்திறக்கவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன் காவல்துறைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    English summary
    Kamalhaasan has condemned Police for firing on public in Thoothukudi. Kamal raised questioned who gave permission for firing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X