For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதன் விவகாரம்...மருத்துவ கல்லூரி சீட் மோசடி...சிக்கிய பச்சமுத்துவின் மலைக்க வைக்கும் பின்னணி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ72 கோடி மோசடி செய்து சிக்கிய எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து சாதாரண பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர்..

1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் என்ற பெயரில் ஒரு பிரைமரி பள்ளி துவங்கப்பட்டது. இந்த பள்ளிதான் இன்றைய எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தாய்.

ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி இன்று எஸ்.ஆர்.எம். குழும அதிபராகி மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குப் போயுள்ளார் பச்சமுத்து.

Who is Pachamuthu?

சென்னை காட்டாங்கொளத்தூர் அருகே தனியே ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். இந்த குழுமத்தின் கல்வி நிறுவனங்களில் ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்... இப்படித்தான் பணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த வசூல்களின் விளைவான உருவான எஸ்.ஆர்.எம். குழும கல்வி நிறுவனங்களின் பட்டியல்:

Nightingale Matriculation Higher Secondary School,

Valliammai Polytechnic Institute,

SRM Engineering College,

SRM College of Nursing and SRM College of Pharmacy,

SRM School of Nursing and SRM College of Physiotherapy,

SRM Institute of Hotel Management,

SRM Arts & Science,

SRM Polytechnic Institute,

Easwari Engineering College,

SRM College of Occupational Therapy,

SRM Institute of Management & Technology,

Valliammai Engineering College,

SRM Institute of Science and Technology,

SRM Dental College,

SRM Medical College Hospital and Research Centre,

SRM Institute of Management and Technology, Modinagar, Delhi

Chennai Medical College, Trichy

Inter Disciplinary School of Indian System of Medicine,

TRP Engineering College, Trichy,

Faculty of Science and Humanities, Vadapalani,

இவைமட்டுமின்றி எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள்,எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ் என வேறு பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார் பச்சமுத்து.

புதிய தலைமுறை டிவியும் பச்சமுத்துவுக்குச் சொந்தமானது. புதிய தலைமுறை பத்திரிகைகளும் வேந்தர் டிவியும் பச்சமுத்துவுக்கு சொந்தமானதுதான்.

இவ்வளவுக்கும் மேலாக 'இந்திய ஜனநாயக் கட்சி' என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார் பச்சமுத்து. 2014 லோக்சபா தேர்தலின் போது பச்சம்முத்து மீது பாலியல் புகாரும் எழுந்தது.

இவற்றுடன் வேந்தர் மூவீஸ் என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் பணியை தொடங்கி பின்னர் திரைப்பட தயாரிப்புகளிலும் கால் பதித்தார் பச்சமுத்து. இந்த வேந்தர் மூவிஸூக்கு பினாமியாக நியமிக்கப்பட்டவர்தான் மதன்.

இந்த மதன் மூலமாகவே மருத்துவ கல்லூரிகளில் இடம் தருகிறோம் என பல நூறு கோடி வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பணத்தை வசூல் செய்துவிட்டு மருத்துவ கல்லூரியில் இடம்தராமல் மோசடி செய்திருக்கிறார் பச்சமுத்து.

இந்த நிலையில் பணத்தை வசூலித்த மதன் மாயமாகிவிட்டார். இதனால் 102 மாணவர்கள் ரூ72 கோடி மோசடி புகார் தரம் தற்போது சிறைக்குப் போயுள்ளார் பச்சமுத்து.

English summary
Here the background of SRM Group Chariman Pachamuthu who was arrested in cheating case today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X