For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் காயலான் கடை முதலாளி அனில் அகர்வால்... இவருக்காகத்தான் தூத்துக்குடியே ரத்தம் சிந்துகிறது!

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான அனில் அகர்வால், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஒருவருக்கு ஆதரவாக அரசையே திரும்பிவிடும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை- வீடியோ

    சென்னை: ஒரே ஒரு ஆளுக்காக தனது சொந்த மக்களையே அரசு நிர்வாகமே சுட்டுக் கொல்லும் அளவுக்கு செல்வாக்குடன் வளர்ந்துள்ள அனில் அகர்வாலுக்கு தூத்துக்குடி சம்பவம் ஒரு விஷயமே இல்லை.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் கனலாக இருக்கிறது.

    கடந்த, 23 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மக்கள் பல போராட்டங்கள் நடத்தியும், நீதிமன்றங்கள் பல உத்தரவுகள் பிறப்பித்தும், ரூ.100 கோடி அபராதம் செலுத்த உத்தவிட்டபோதும், அதையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு, தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம், அதன் உரிமையாளரான அனில் அகர்வால்தான்.

    பாட்னாவில் 1954ல் பிறந்த அகர்வாலின் குடும்பம் அலுமினிய கம்பி தொழிலில் ஈடுபட்டு வந்தது. தனது 19 வயதில் மும்பைக்கு சென்ற அகர்வால், குடும்பத்தைப் போலவே, அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்களின் மதிப்பை தெரிந்து வைத்திருந்தார்.

    காயலான் கடை

    காயலான் கடை

    பழைய, பயன்படுத்தப்படாத தாமிரக் கம்பிகளை வாங்கி அதை கைமாற்றி கொடுக்கும் காயலான் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அந்த நேரத்தில் தான், நாமே ஏன் தாமிரக் கம்பிகளை தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. சிறிய அளவில் செயல்பட்ட ஒரு ஆலையை விலைக்கு வாங்கினார். இன்று உலகெங்கும் மிகப் பெரிய தாமிர சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். அவருடைய வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்ததுதான் ஸ்டெர்லைட். பல நாடுகளில் தாமிர தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களை வைத்துள்ளார்.

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    இந்த ஒருவருக்காக, மொத்த அதிகாரத்தை தனது மக்களுக்கு எதிராக தமிழக அரசு திருப்பி விட்டுள்ளது. துப்பாக்கிச் சூடுகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இது போன்ற அத்துமீறல்கள், அதிகாரத்தை வளைத்து போடும் செல்வாக்கு ஆகியவை அனில் அகர்வாலுக்கு புதிதல்ல.

    துரத்தப்பட்ட மக்கள்

    துரத்தப்பட்ட மக்கள்

    ஒடிசாவில் பாக்சைட் ஆலையை அமைப்பதற்காக, ஒரு பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களை இவருடைய நிறுவனம் அடித்து துரத்தியது. இது தொடர்பான வழக்கை 2005ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த ஆலை அமைக்க தடை விதித்தது. அதனால், அந்த மக்கள் உயிர் இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பினர்.

    வெளிநாட்டிலும் அராஜகம்

    வெளிநாட்டிலும் அராஜகம்

    இதேபோல் ஜாம்பியா நாட்டிலும், தாமிர தாதுக் கழிவுகளை அங்குள்ள ஆற்றில் கொட்டியதாக அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், அந்த ஆலையும் மூடப்பட்டது. சட்ட விதிகளை மீறுவது என்பது அனில் அகர்வாலுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்று, அது தொடர்பான வழக்கை விசாரித்த ஜாம்பியா நீதிமன்றம் கூறியுள்ளது.

    English summary
    Anil Agarwal is not new for controversies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X