For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. கதை முடிஞ்சதே...எக்மோவை கழற்றி வீசுங்க.. உத்தரவிட்ட "பாஸ்" - அம்பலமாகும் ரகசியங்கள்!

ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டிருந்த எக்மோவை ஒருவரது நெருக்கடியால்தான் அப்பல்லோ அகற்றியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது பொருத்தப்பட்டிருந்த எக்மோவை கழற்றி வீசுங்கள் என 'பாஸ்' உத்தரவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ந் தேதி மாலை 4.20 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த மாரடைப்புக்கு காரணமே உடன் இருந்த ஒருவர், தம்மை அரசியல் வாரிசாக அறிவிக்க ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுத்தார் என கூறப்பட்டு வருகிறது.

நுழைந்த பாஸ்

நுழைந்த பாஸ்

மாரடைப்பு ஏற்பட்ட ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது அப்பல்லோ மருத்துவமனைக்குள் 'பாஸ்' நுழைந்திருக்கிறார்.

தூக்கி வீசுங்க

தூக்கி வீசுங்க

அங்கிருந்த நிலைமையை பார்த்துவிட்டு தமது சீனியரிடம், அதான் முடிஞ்சு போச்சு.. இனி அந்த கருவியெல்லாம்.. தூக்கிவீசிட்டு அறிவிச்சுடுங்க என எகத்தாளமாக கூறினாராம். இதை அருகே இருந்த டாக்டர்கள் பலரும் அதிர்ச்சியாகிப் போனார்களாம்.

மீண்டும் நெருக்கடி

மீண்டும் நெருக்கடி

இருந்தபோதும் மருத்துவர்கள் 24 மணிநேரம் பொருத்தாக வேண்டும். அதன்பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என கறாராக கூறினார்களாம். இதனால் 24 மணிநேரம் காத்திருந்திருக்கிறார் பாஸ். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் இப்பவாவது எடுக்கலாமா என டாக்டர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.

முறைப்படி அறிவிப்பு

முறைப்படி அறிவிப்பு

இதற்கு அடுத்துதான் அப்பல்லோ மருத்துவமனையில் அறிக்கையில் கூறியபடி எக்மோவை எடுக்கலாம் என்ற முடிவை ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் 'முறைப்படி' தெரிவித்திருக்கின்றனர். இதனைத்தான் பி.எச். பாண்டியன் போன்றவர்கள் எக்மோவை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு எப்படி அப்பல்லோ நிர்வாகம் தள்ளப்பட்டது என்ற கேள்விக்கு பதில் வேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார் என்கின்றன ஓபிஎஸ் வட்டாரங்கள்.

English summary
Team OPS sources said that Some Pressure for remove the Ecmo from Jayalalithaa's heart in Apollo on Dec 5 then they declared she was no more.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X