For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ஆளுநர் பொறுப்பை கவனிக்கும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ்.. இதோ அவரை பற்றி சில தகவல்கள்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ளார் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ள மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பற்றிய விவரங்கள்.

Who take additional charge in tamilnadu Governor
  • தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரைச் சேர்ந்தவர் வித்யாசாகர் ராவ்
  • ஹைதராபாத்தில் பிஎஸ்சி கல்லூரிப் படிப்பை முடித்தவர். பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.
  • சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார் வித்யாசாகர் ராவ்
  • 1972-ல் கரீம்நகர் மாவட்ட ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.
  • மெட்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆந்திர சட்டப்பேரவைக்கு 1985-ல் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1998-ல் கரீம் நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • அதே ஆண்டு ஆந்திரப் பிரேதச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 1999-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று தேசிய அரசியலில் அறிமுகமானார்.
  • பின்னர், அதே ஆண்டில் இலாகா மாற்றப்பட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
  • 2014 ஆகஸ்ட் மாதம், வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநில அளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
  • தற்போது, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
English summary
President Pranab Mukherjee gave Maharashtra Governor C. Vidyasagar Rao additional charge of Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X