For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பாஜக தலைவர் யார்.. 7ம் தேதி அறிவிப்பு.. யாருக்கு அதிக வாய்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றார்.இதையடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார் என்பது குறித்து வரும் 5ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தி 7மம் தேதி அறிவிக்கப்பட உள்ளார்.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி ஏற்றார் சுமார் 5 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் இருந்தார். அவரது பதவி காலம் டிசம்பர் மாதம் வரை இருந்தது.

இந்நிலையில் திடீரென தமிழிசை சௌந்திரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக்க செப்டம்பர் மாதம் மத்திய அரசு நியமித்தது. அதன்பிறகு புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை

வங்கிகள் இந்த 3 'சி' க்களுக்கு பயப்பட வேண்டியதில்லை.. தாராளமா கடன் கொடுங்க.. நிர்மலா சீதாராமன் வங்கிகள் இந்த 3 'சி' க்களுக்கு பயப்பட வேண்டியதில்லை.. தாராளமா கடன் கொடுங்க.. நிர்மலா சீதாராமன்

தலைவர் இல்லை

தலைவர் இல்லை

விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவார் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் கடந்த 4 மாதங்களாக தலைவர் இல்லாமல் தமிழக பாஜக இயங்கிவந்தது.

தலைவர்கள் தேர்வு

தலைவர்கள் தேர்வு

இந்த நிலையில் கட்சி ரீதியாக தேர்தல்கள் நடந்தது. கிளை தேர்தல்களும், ஒன்றிய தேர்தலும், மாவட்ட தேர்தலும் பாஜகவில் நடத்தி முடிக்கப்பட்டது. பாஜகவில் கட்சி ரீதியாக உள்ள 60 மாவட்டங்களில் 40 மாவட்டங்களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 40 மாவட்டங்களுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

7ம் தேதி தலைவர் அறிவிப்பு

7ம் தேதி தலைவர் அறிவிப்பு

இதையடுத்து வருகிற 5ம் தேதி புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 200 பேர் பங்கேற்க உள்ளார்கள்.புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக கருத்து கேட்கப்படுகிறது. அதன்பிறகு 7ம் தேதி தலைவர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

தமிழக பாஜக புதிய தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சிபி. ராதாகிருஷ்ணன், வானதிசீனிவாசன் , கருப்பு முருகானந்தம் உள்பட பலர் உள்ளார்கள். இவர்களில் ஒருவர் தலைவராக அதிக வாய்ப்பு உள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை புதிய தலைவர் தலைமையில் தான் பாஜக சந்திக்க போகிறது.

English summary
who will become tamil nadu state bjp president? officially will announced on january 7th 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X