For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசி அமைச்சரவையில் ஓபிஎஸ் யார்? 2-வது இடத்துக்கு முட்டி மோதும் அமைச்சர்கள்!

முதல்வர் நாற்காலியில் அமர துடிக்கிறார் சசிகலா. அவர் முதல்வராகும் நிலையில் அமைச்சரவையில் 2-வது இடம் யாருக்கு என முட்டி மோதுகிறார்கள் அமைச்சர்கள்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா அமைச்சரவையில் 2-வது இடத்தை பெறுவதில் அமைச்சர்கள் முட்டி மோதுவதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றிய சசிகலா திடீரென முதல்வர் பதவிக்கும் குறிவைத்தார். அமைச்சர்கள் பலரும் சசிகலாவே முதல்வர் என கூக்குரல் எழுப்பினர்.

இந்த குரல் தற்போது சட்டென அமைதியாகி இருக்கிறது. இருந்தபோதும் சசிகலாவை வரும் 10 அல்லது 12-ந் தேதி முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்கு பகீர பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சபாநாயகாரகும் ஓபிஎஸ்

சபாநாயகாரகும் ஓபிஎஸ்

அத்துடன் சசிகலா முதல்வரானால் அவரது அமைச்சர்கள் யார் யார் என்ற பட்டியலையும் மன்னார்குடி தரப்பு தீவிரமாக தயாரித்து வருகிறது. தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு சபாநாயகர் பதவியை தரப்போகிறார்களாம்.

2-வது இடம்

2-வது இடம்

இதனால் சசிகலா அமைச்சரவையில் "ஓபிஎஸ்" அதாவது 2-வது இடம் யாருக்கு என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது. சசிகலா கணவர் நடராஜனின் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி தனக்குதான் அந்த 2-வது இடம் என நம்பிக்கையோ இருக்கிறார்.

சீனிவாசன், மணியன்

சீனிவாசன், மணியன்

ஆனால் திண்டுக்கல் சீனிவாசனோ தினகரன் மூலம் தமக்கே அந்த 2-வது இடம் கிடைக்க வேண்டும் என்ற வியூகத்தில் இருக்கிறாராம். அதேபோல் ஓ.எஸ். மணியனும் திவாகரன் மூலம் தமக்கே 2-வது இடம் கிடைக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம்.

ஆளுநர் மாளிகை மவுனம்

ஆளுநர் மாளிகை மவுனம்

இதனிடையே வரும் 12-ந் தேதி சசிகலா பதவி ஏற்கலாமா என்பது குறித்து ஆளுநர் மாளிகையிடம் கேட்டதற்கு இன்னும் பதில் ஏதும் வரவில்லை என்பதால் பெரும்குழப்பத்தில் இருக்கிறது மன்னார்குடி கோஷ்டி.

English summary
Sources Said that Three Ministers trying to get No2 Rank in Sasikala Cabinet who is trying to capture the Tamilnadu CM Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X