For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.100 கோடி அபராதம் கர்நாடக கருவூலத்துக்கு போகுமாம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லாத நிலையில் அவர் மீது விதிக்கப்பட்ட அபராத் தொகை எந்த அரசை சேரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லாததால் அவரது அபராதத் தொகை எந்த அரசின் கருவூலத்துக்குச் செல்லும் என்பது கேள்வி குறியாக உள்ளது.

கடந்த 1991- 96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக அன்றைய மதிப்பில் ரூ.66 கோடியை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த பெங்களூர் தனி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதேபோல் அவருக்கு உடந்தையாக இருந்த தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதத்தையும் விதித்தது.

 தமிழகத்தில் வழக்குப் பதிவு

தமிழகத்தில் வழக்குப் பதிவு

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று பெங்களூர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரது அபராதத் தொகை வசூலிக்கப்படும். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கானது தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டாலும், அங்கு விசாரணையில் வெளிப்படைத் தன்மை இருக்காது என்பதால் வழக்கானது பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனால் அவரது அபராதத் தொகை எந்த அரசின் கருவூலத்துக்கு செலுத்தப்படும் என்பது கேள்வியாக உள்ளது.

 கர்நாடக கருவூலம்

கர்நாடக கருவூலம்

சட்டப்படி இழப்பை சந்தித்துள்ள தமிழகத்துக்கே அந்த அபராதத் தொகை சொந்தமாகும். ஜெயலலிதாவின் சொத்துகளை அடையாளம் கண்டு ஏலம் விட்டு அதன் மூலம் மட்டுமே அபராதத் தொகையை பெற முடியும் என்பதால் அதற்கான நீதிமன்ற ஆணையை கர்நாடக அரசு வைத்திருக்க வேண்டும்.அந்த அபராதத் தொகையானது வசூலிக்கப்பட்டு கர்நாடக அரசின் கருவூலத்தில் செலுத்தப்படும்.

 அப்புறம் தருவாங்க

அப்புறம் தருவாங்க

அப்படியானால் தமிழகத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழலாம். ஒரு சட்ட நடைமுறைக்காகத்தான் கர்நாடக கருவூலத்திற்கு பணம் செல்லும். ஆனால் பிறகு அது தமிழக கருவூலத்துக்கு மாற்றப்படும். அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரின் விவகாரத்திலும் மேற்கண்ட நிலையே பின்பற்றப்படும்.

 சசிகலாவின் அபராதம்

சசிகலாவின் அபராதம்

ஒருவேளை அபராத்த தொகையை சசிகலா செலுத்தவில்லை எனில் மூன்று வழிகள்தான் உண்டு. அவை சசிகலா மேலும் 13 மாதங்களுக்கு சிறை தண்டனை அனுபவிப்பது, அவரது சொத்துகள் அடையாளம் காணப்பட்டு ஏலமிடுவது, அவரது கட்சியினரிடம் அந்தத் தொகையை வசூலிப்பது ஆகியவைதான். அபராதத் தொகையை வசூலிக்க சென்னையில் உள்ள புலனாய்வு அமைப்பின் உதவியை கர்நாடக அரசு நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகை பெறப்பட்டவுடன் அந்த தொகையானது தமிழக அரசின் கருவூலத்துக்கு செலுத்தப்படும் என்று தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய நகைகள், ஆவணங்கள், விலை உயர்ந்த பொருள்கள் ஆகியன கர்நாடக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

English summary
Sasikala Natarajan has been ordered to pay a fine by the Supreme Court of India. In the case of J Jayalalithaa the case stood abated since she is no more, but the fine of Rs 100 crore imposed on her too will have to be recovered. The question is who will get this money once it is recovered?As per the law, the money collected as the fine amount will go to the government of Tamil Nadu. The original case was filed in Tamil Nadu and since the Supreme Court felt that a fair trial would not be held, it was shifted to Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X