For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யெச்யூஸ்மி.... தக்காளி வெல எப்ப சார் குறையும்? - வீடியோ

கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கொஞ்சமும் குறையாமல்கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் நொந்து போய் உள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தக்காளி மற்று ம் சின்னவெங்காயத்தின் விலை கடந்த ஒருவாரமாக கொஞ்சமும் குறையாமல் இருப்பதால் பொதுமக்களும் வியாபாரிகளும் நொந்து போய் உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி இல்லாமல் சமையலே செய்யமுடியாது என்னும் நிலை உள்ளதால் பொதுமக்கள் வேறுவழியின்றி வாரம் ஒரு கிலோ தேவைப்படும் வீட்டுக்கு கால் கிலோ வாங்கிச் செல்கின்றனர்.

 In whole Tamilnadu tomato price hiked like anything

தக்காளி விலை குறையுமா என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் கேள்வி கேட்ட போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்படும் என பதில் கூறினார். ஆனால், தமிழகம் முழுவதும் பசுமை பண்ணைக் கடைகள் பரவலாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரமும் தக்காளி அதே 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஜிஎஸ்டி வரியால் பல பொருட்களின் விலை உயர்ந்து, வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழும் நேரத்தில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆகையால், தக்காளி விலை எப்போது குறையும் என ஆவலுடன் வியாபாரிகளும் பொதுமக்களும் காத்துக்கொண்டு உள்ளனர்.

English summary
In whole Tamilnadu tomato price hiked like anything and poor and middle class people suffering for last ten days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X