For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊரே கொண்டாடுகிறது.. கமலா ஹாரிஸுக்கு மன்னார்குடியில் கட் அவுட் வைத்த கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

மன்னார்குடி: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு நிற்கும் கமலா தேவி ஹாரிஸுக்கு ஆதரவாக மன்னார்குடி அருகே இருக்கும் துளசேந்திரபுரம் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின் முக்கியமான காரணம் இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா செனட்டர் கமலா தேவி ஹாரிஸ் முக்கியமான கேம் சேஞ்சராக மாறி இருக்கிறார். இவர் ஜோ பைடன் மூலம் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இவர்

யார் இவர்

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட முயன்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தற்போது துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரை ஜோ பைடன் தனது சொந்த விருப்பத்தின் பெயரில் தேர்வு செய்துள்ளார். இவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தால் பல தரப்பட்ட மக்கள் இவருக்கு வாக்களிப்பார்கள் என்று ஜோ பைடன் நம்புகிறார்.

இந்தியா வந்தார்

இந்தியா வந்தார்

கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் தனது பால்ய நாட்களை கழித்து இருக்கிறார். அடிக்கடி இவர் தமிழகம் வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். இவர் தாய் தமிழ் பெண். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இவர்கள் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். இதனால் இந்தியாவில் இவர் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார் .

மன்னார்குடி எப்படி

மன்னார்குடி எப்படி

எல்லாம் இப்படி இருக்க இன்னொரு பக்கம் கமலா ஹாரிஸை மன்னார்குடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் கொண்டாடி வருகிறது. எங்கள் ஊர் பெண் அமெரிக்க துணை அதிபர் ஆக போகிறார் என்று கொண்டாடி வருகிறது. துணை அதிபர் பதவிக்கு நிற்கும் கமலா தேவி ஹாரிஸுக்கு ஆதரவாக மன்னார்குடி அருகே இருக்கும் துளசேந்திரபுரம் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின் முக்கியமான காரணம் இருக்கிறது.

யார் இவர்

யார் இவர்

கமலா ஹாரிஸின் தாத்தா மன்னார்குடியை சேர்ந்தவர். பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன். கோபால் சிவில் சர்வீஸ் அதிகாரியாக ஆங்கிலேயர் காலத்திலேயே பணியாற்றி இருக்கிறார். இவர் அமெரிக்காவில் 1930க்கு பின் சென்று அங்கேயே குடியேறினர். இதன் மூலம்தான் கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் குடியேறினார்.

மக்கள் கொண்டாட்டம்

மக்கள் கொண்டாட்டம்

இந்த நிலையில் தங்கள் ஊர் பூர்வீகத்தை கொண்ட பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவது அந்த ஊர் மக்களை சந்தோசம் அடைய வைத்துள்ளது . இதனால் அந்த ஊரில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கோபாலன் பேத்தி, பைங்காட்டு நாட்டு பெண் கமலாவுக்கு வாழ்த்துக்கள் என்று நிறைய வித விதமான கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.

செம போங்க

செம போங்க

கமலா ஹாரிஸுக்கு கருப்பின பெண், இந்திய வம்சம், குடியேறிகளின் பிரச்சனை தெரிந்தவர் என்று இவருக்கு நிறைய ப்ளஸ் பாய்ண்ட் இருக்கிறது. இவர்தான் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்தியர், முதல் கறுப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் வெற்றிபெற வேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் விருப்பப்படுகிறார்கள் .

English summary
Why a Village in Mannargudi celebrates Kamala Harris nominee as Vice President of the US?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X