For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபசார போஸ்டர், குத்தாட்டம்... திருச்சி சிவா... ஈரோடு மல்லிகா பரமசிவத்தின் 'கல்தா' பின்னணி!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் 12 மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலைப் பார்த்து ஈரோடு அதிமுகவினர்தான் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்...சிட்டிங் மேயர் மல்லிகா பரமசிவத்துக்கு மீண்டும் சீட் தராததுதான் இந்த மகிழ்ச்சிக்கு காரணமாம்...

2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக மல்லிகா பரமசிவத்தை அதிமுக மேலிடம் அறிவித்ததுதான் பாக்கி... அன்று முதல் பதவி முடியும் வரை பஞ்சாயத்து.. பஞ்சாயத்து... இதைத்தான் சாதித்திருக்கிறார் மல்லிகா பரமசிவம்..

2011-ல் மேயர் வேட்பாளராக மல்லிகா பரமசிவம் அறிவித்த உடனேயே தமிழகத்தையே பரபரப்பாக்கியது அந்த போஸ்டர்... ஈரோட்டில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது இதுதான்...

விபச்சார வழக்கு போஸ்டர்

விபச்சார வழக்கு போஸ்டர்

'1999-ம் ஆண்டு விபசார வழக்கில் கைதான ஈரோடு மாநகர மேயர் அதிமுக வேட்பாளரா? சிந்திப்பீர் குற்ற எண்:682/99" என போஸ்டர் ஒட்டப்பட்டது. அதன் பின்னர் மேயராக ஜெயித்த உடனே கோஷ்டி பஞ்சாயத்து கோதாவில் குதித்தார்.

கோஷ்டி பஞ்சாயத்து

கோஷ்டி பஞ்சாயத்து

துணை மேயர் பதவி பழனிச்சாமி ஏற்பு நிகழ்வு பேனரில் தம்முடைய படத்தை போடவில்லை என ரகளையில் ஈடுபட்டார்... செங்கோட்டையன் அண்ணன்கிட்ட சொல்லுவேன் என மல்லிகா சவுண்டுவிட கொந்தளித்து போய் கெரோ செய்தனர் அதிமுக தொண்டர்கள்.

பத்திரிகை ஆபீசில் தாக்குதல்

பத்திரிகை ஆபீசில் தாக்குதல்

பின்னர் ஈரோடு காலைக் கதிர் நாளிதழ் அலுவலகத்தில் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய சர்ச்சையிலும் சிக்கினார் மல்லிகா. உச்சகட்டமாக அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் 'களேபர' குத்தாட்டம் போட அதிமுகவும் பிரச்சனையாகிப் போனது..

அப்பாவே கட்சி மாறியது

அப்பாவே கட்சி மாறியது

சட்டசபை தேர்தலின் போது அதிமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தது மல்லிகா பரமசிவத்தின் குடும்பம். எம்ஜிஆர் காலத்து அதிமுக தொண்டரான மல்லிகாவின் அப்பாவே திமுகவில் போய்சேர்ந்துவிட்டார்... அந்தளவுக்கு அராஜகத்தில் ஆடியிருக்கிறார்.

திருச்சி சிவா

இவ்வளவுக்கும் மேலாக அண்மையில், அதிமுக எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு கொடுத்த ஒரு பேட்டிதான் மிக முக்கியமானது என்கிறார்கள்.. அந்த பேட்டியில், சசிகலா புஷ்பா, மனைவி சத்தியபாமா, மல்லிகா பரமசிவம் எல்லோருமே கட்சியை மறந்து திருச்சி சிவாவுடன் அன்னோன்யமாக இருந்தாங்க என்பதுதான் அந்த பேட்ட்.

இது ஒன்றே போதாதா? அவருக்கு கல்தா கொடுத்த போயஸ் கார்டன் திசையை நோக்கி பெரும் கும்பிடு போடுகிறார்கள் அதிமுகவினர்.

English summary
Here the reasons for local body ticket dening to Erode Mayor Mallika Paramasivam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X