For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் ரஜினிகாந்த்துக்கு ஆதாயமா? பாஜக திட்டத்தால் அதிமுக, திமுக பகீர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்த அதிமுக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முறையை அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. 2021ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்யக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ள மாநில அரசுகள் 2019 ஆம் ஆண்டிலேயே லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இதை பல மாநில அரசுகளும் விரும்பவில்லை.

இதனிடையே 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளிடம் இது பற்றி கருத்து கேட்பதற்கு சட்ட ஆணையம் இன்றும் நாளையும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை டெல்லியில் நடத்தி வருகிறது.

அதிமுக எதிர்ப்பு

அதிமுக எதிர்ப்பு

இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் இன்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டார். இந்த திட்டத்தில் அதிமுகவுக்கு விருப்பம் இல்லை என்று ஆட்சேபனை வெளிப்படுத்தி உள்ளார. 2015 ஆம் ஆண்டில் இதே திட்டத்தை ஆதரித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்தது அதிமுக. ஆனால் இப்பொழுது அந்த கட்சி ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை சந்திக்க அவர்கள் தயாராக இல்லை என்பதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

திமுக நாளை

திமுக நாளை

திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா நாளை இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கட்சியின் கருத்தை எடுத்து வைத்துள்ளார். திமுகவும் இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா மற்றும் சட்டசபை ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு, தமிழகத்தில் கூட்டணி பேரத்தில் கை ஓங்கும் நிலை ஏற்படும் என்பதால் அதிமுகவும் திமுகவும் இணைந்து எதிர்க்கின்றன என்று தெரிகிறது.

ரஜினிக்கு ஆதரவா

ரஜினிக்கு ஆதரவா

லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அது நடிகர் ரஜினிகாந்த் கட்சிக்கு ஆதரவானதாக மாறும் என பாஜக நினைக்கிறதாம். எனவேதான் இதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறதாம். திமுக மற்றும் அதிமுக வட்டாரத்திலும் இந்த சந்தேகம் உள்ளது. ரஜினிகாந்த்துக்கு தமிழ் நாட்டில் இப்போதைக்கு அலை இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி நம்புவதால் அடுத்த ஆண்டிலேயே தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தால், ரஜினிகாந்த் கட்சிக்கு ஆதரவளித்து தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலம் கடந்தால் ரஜினியின் மவுசு குறைந்துவிடும் என்பது பாஜக பதற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

திமுக நிலைப்பாடு

திமுக நிலைப்பாடு

ரஜினி விஷயமும், அதிமுக திமுக கட்சிகள் அடுத்த ஆண்டே தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என கூறப்படுகிறது. திமுகவை பொறுத்தளவில் 2019க்கு முன்பாகவே தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருவதை விரும்புகிறதாமே தவிர, லோக்சபா தேர்தலோடு ஒட்டி வேண்டாம் என நினைக்கிறதாம்.

English summary
Why Bjp wants one nation, one election? and how it will help actor Rajinikanth's politics in Tamilnadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X