For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணத்தட்டுப்பாடு பின்னணியில் உள்ள பகீர் காரணங்கள் இவைதான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ

    சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டிதான், நாடு முழுக்க ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளன.

    நாட்டின் பல பகுதிகளிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள். பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டார்களோ என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்தேக கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

    Why cash crunch grips India? possibly reasons for the money shortage

    திடீரென பணத்தேவை அதிகரித்துவிட்டதுதான் இதற்கு காரணம் என்றும், அதை சரி செய்துவிடுவோம் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

    பணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்களாக முன் வைக்கப்படுபவை இவைதான்:

    • டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வங்கிகளுக்கு வழங்கும் பணத்தின் அளவை ரிசர்வ் வங்கி குறைத்ததாக கூறப்படுகிறது.
    • பல வட மாநில வங்கிகளில் பணம் எடுக்கும் விகிதம் டெபாசிட் செய்யும் அளவை விட அதிகமாக உள்ளது. 2018 மார்ச் நிலவரப்படி, வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. அதுவேர 2016-17ம் நிதியாண்டின் இக்காலகட்டத்தில் 15.3 சதவீதமாக இருந்தது.
    • புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.2000 போன்ற நோட்டுகளை ஏடிஎம்களில் செலுத்துவற்கான தொழில்நுட்ப வசதி இன்னும் பல ஏடிஎம்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லையாம். இதனால் புதிய நோட்டுகளை ஏடிஎம்களில் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • எந்தப் பகுதிக்கு அதிகமான பணம் வழங்க வேண்டும் என்ற முன்யோசனையின்றி தேவையற்ற பகுதிகளில் அதிக பணமும் தேவையுள்ள பகுதிகளில் குறைந்த பணமும் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் அச்சம் காரணமாக, வங்கிகளில் டெபாசிட் செய்வதை குறைத்துக்கொண்டு கையில் அதிக ரொக்கத்தை இருப்பு வைக்க தொடங்கியுள்ளதும், ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணமாம்.
    • கர்நாடகாவில் மே 12ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, ஏடிஎம்களில் இருந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகார் பல மட்டங்களிலும் எழுந்துள்ளது. திடீரென பணத்தேவை அதிகரித்துள்ளதாக ஜேட்லி கூற காரணம் என்ன என்ற கேள்வியை குற்றம்சாட்டுவோர் முன் வைக்கிறார்கள்.

    English summary
    During the year ended March 2018, bank deposits grew by a measly 6.7 percent compared to 15.3 percent in 2016-17.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X