For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்?... மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை- வீடியோ

    திருச்சி: அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதே அழகிரியின் பேரணி குறித்த செய்திகள் வெளியே வரக் கூடாது என்பதற்காகத்தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

    கடந்த 5-ஆம் தேதி அழகிரி தனது பலத்தை நிரூபிக்க சென்னை மெரினாவில் அமைதி பேரணி நடத்தினார். இந்த பேரணிக்கு முன்னதாக திமுகவினர் யாரேனும் அழகிரியின் பேரணிக்கு சென்று விடுவரோ என்ற பதற்றம் அண்ணா அறிவாலயத்தில் இருந்தது.

    இந்த நிலையில் அன்றைய தினம் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் உயரதிகாரிகள் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

    அதிமுக பதற்றம்

    அதிமுக பதற்றம்

    இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபி ராஜேந்திரனும் உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அதிமுகவும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது.

    முடக்க சதி

    முடக்க சதி

    இது குறித்து திருச்சி வந்த தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது செயல்பாட்டை முடக்க சதி நடைபெறுகிறது.

    சதி வலை

    சதி வலை

    இதனால் அவர் மீது வேண்டுமென்றே புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுகவிற்கும் பாரதிய ஜனதா விற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணியே அவர்களுக்கு இடையேதான், எங்களுக்கு இடையே இல்ல.

    இதுவே எடுத்துக்காட்டு

    இதுவே எடுத்துக்காட்டு

    அழகிரியின் பேரணி குறித்த செய்திகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக ஸ்டாலினுக்கு உதவவே மத்திய அரசு சிபிஐ அதிகாரிகளை அனுப்பி அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தியது. எனவே திமுக- பாஜக கூட்டணி இந்த ஒரு சம்பவமே போதும் என்றார் அவர்

    English summary
    Thambidurai explains that why CBI raid conducted in Minister and Police official's house? All because of Alagiri.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X