For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குப்பதிவு தள்ளி வைப்பு கண்துடைப்பா? 2 தொகுதிகளில் மட்டும்தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக அதிகளவில் புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில், வாக்குப்பதிவை மே 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இவ்விரு தொகுதிகளில் மட்டும்தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஆனால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியிலும், தஞ்சாவூர் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறவில்லை.

Why EC postpone election in 2 constituency?

இரு தொகுதிகளிலும் பணம் வெள்ளமாய் பாய்ந்ததால் தேர்தலை 23ம்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்குப்பதிவை நடத்துவதற்காக சூழ்நிலை இல்லாததால், அங்கு 16ம்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏறத்தாழ இதே காரணங்கள்தான் தஞ்சாவூர் தொகுதிக்கும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், இவ்விரு தொகுதிகளிலும்தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டா என்றால் அதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொள்ளாது. ஏறத்தாழ எல்லா தொகுதிகளிலும், குறிப்பிட்ட சில கட்சிகள் பணத்தை தண்ணீராக வாரி இறைத்துள்ளன.

அரவக்குறிச்சியிலும், தஞ்சாவூரிலுமே பணம் பாய்கிறது என்றால், முன்னாள், இன்னாள் முதல்வர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண வெள்ளம் எப்படி பாய்ந்துள்ளது என்பதை சொல்லி மாளாது. ஆனால் அங்கெல்லாம் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் கேபிள் டி.வி இலவசம் என்று செல்போன் நம்பர் ஒன்றும் தரப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதற்கு போன் செய்தால் ஓட்டுக்கான பணம் உறுதியானதாம். காஞ்சிபுரத்தில் வீடு வீடாக திருமண பத்திரிகை கொடுக்கப்பட்டது. பத்திரிகையை பிரித்துப் பார்த்தால், 500 ரூபாய் வைக்கப்பட்டிருந்ததாம்.

சென்னை அடையாறு பகுதியில் இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்க என்றபடி 20 லிட்டர் பெட்ரோல் கூப்பனைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதை வாங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாம். அவர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு போன் செய்து நிலவரத்தை சொல்லினாராம்.

இரவில் கரண்ட் கட் ஆனால் ஓட்டுக்குப் பணம் கொடுக்க ஆளும் கட்சியினர் வருகிறார்கள் என்பதற்கான சிக்னல். மக்கள் கதவை திறந்து வைத்து காத்திருந்து பணம் வாங்கியுள்ளனர். போலீஸ், மின்வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணியுடன் மின்வெட்டு ஏற்படுத்தி பண பட்டுவாடா செய்திருக்கிறது ஆளும் கட்சி.

சாதாரணமான தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 250 ரூபாயும், போட்டி பயங்கரமாக இருக்கும் என்று கருதும் தொகுதிகளில் 500 ரூபாயும், அமைச்சர் தொகுதி என்றால் அதிகபட்சமாக ரூ. 2000 வரையும் தரப்பட்டுள்ளதாம். சில இடங்களில் குடும்பங்களுக்கு பேக்கேஜாக 5000 ரூபாய் தரப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் ஊராட்சி வாரியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்ட தகவல் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியிருந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில், ஊரில் உள்ள சிறுவர்களை வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாம். இதேபோல திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாம்.

திருவண்ணாமலை தொகுதியில், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலு தரப்பு ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.1000 என வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் மேயர் ராசன் செல்லப்பா, 11ம் தேதி இரவே முக்கால்வாசி பணத்தை சப்ளை செய்துவிட்டதாக ஊடங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அங்கே காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது, எனவே, நீங்க கண்டுகொள்ளாதீர்கள் என்று, திமுக தரப்பையும் பணத்தால் அமைதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி மாநிலம் முழுக்க சொல்லிக்கொண்டே போகலாம். தேர்தலை ஒத்திவைப்பதென்றால் 234 தொகுதிகளுக்குமே ஒத்திவைக்க வேண்டிய நிலையில்தான் தமிழகம் உள்ளது. ஆனால் 2 தொகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது. இல்லையென்றால், மோசடியில் பெரிய மோசடி, சிறு மோசடி என வகை பிரித்து தேர்தலை தள்ளி வைத்ததாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

English summary
Why EC postpone election in 2 constituency in Tamilnadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X