For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் ஏன்?-போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம்

ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது வன்முறையில் ஈடுபட்டதால்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்தோம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடைப்பெற்றது. ஆனால் இங்கு அவர்கள் வன்முறையில் ஈடுப்பட்டதால் தான் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தோம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

காவல்நிலையத்தில் குறைகளை மனுவாக பெற புதிய திட்டம் அறிமுகம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். மேலும் காலை மற்றும் மாலையில் மக்களை ஆய்வாளர் நேரடியாக சந்திப்பார் என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஆணையர் விஸ்வநாதன் பேசினார்.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

அப்போது அவர், காவல்நிலையங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தும பணி நடைப்பெற்று வருகிறது. விரைவில் இந்த பணி அனைத்து காவல்நிலையங்களிலும் செய்து முடிக்கப்படும்.

பொதுமக்களுடன் சந்திப்பு

பொதுமக்களுடன் சந்திப்பு

காலை 11 மணியில் இருந்து 12:30 மணி வரையும் , மாலை 8 மணியில் இருந்து 9 மணி வரை அந்தெந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

சென்னை சில்க்ஸ் இடிப்பு

சென்னை சில்க்ஸ் இடிப்பு

சென்னையில் போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தி.நகரில் தீவிபத்துக்கு உள்ளான கட்டிடம் எந்த அபாயமும் இல்லாமல் இடிக்கப்படும். அதன் பின்னர் கட்டிடத்தில் அருகில் உள்ள மக்கள் தங்கள் பகுதிக்கு வரலாம்.

போக்குவரத்து சிக்னல்

போக்குவரத்து சிக்னல்

சென்னையில் ஏற்பட்ட வர்தா புயலின் போது பாதிப்படைந்த சிக்கனல்களை, சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி துவங்க உள்ளது.

குண்டர் சட்டம் ஏன்?

குண்டர் சட்டம் ஏன்?

ஈழதமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடைப்பெற்றது. ஆனால் இங்கு அவர்கள் வன்முறையில் ஈடுப்பட்டதால் தான் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பைக் ரேஸ்

பைக் ரேஸ்

பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மயிலாப்பூரில் நடந்த பைக் ரேசால் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai city Police Commissioner A.K.Viswanathan on today explained detaining Tamil activist and leader of the May 17 Movement, under Goondas Act, along with three other functionaries of Tamilar Vidyal Katchi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X