For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோச்சடையான் பட கடனை செலுத்த தவறினால் கிரிமினல் நடவடிக்கை.. லதா ரஜினிகாந்திற்கு உச்ச நீதிமன்றம் கெடு

கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என லதா ரஜினிகாந்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என லதா ரஜினிகாந்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் கோச்சடையான் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

Why haven't u paid the 8.5 Cr debt asks SC to Latha Rajinikanth

இந்த படம் எடுப்பதற்காக லதா ரஜினிகாந்த் ஆட்பீரோ நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் இப்போதுவரை 1.5 கோடி மட்டுமே அடைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8.5 கோடியை லதா ரஜினிகாந்த் செலுத்தவில்லை. இதனால் அந்த நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

தற்போது இந்த வழக்கில் லதா ரஜினிகாந்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அதன்படி கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இந்த கேள்விக்கான பதிலை இன்று மதியம் 12.30க்குள் தெரிவிக்குமாறு லதாவிற்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

பதிலை தெரிவிக்கவில்லை என்றாலோ, கடனை அடைக்க முடியாது என்று கூறினாலோ கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

English summary
SC questions Latha Rajinikanth on Kochadaiyaan movie debt case. SC asked why haven't u paid the 8.5 Cr debt. Latha bought 10 cr from a movie company but gave only 1.5 cr back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X