For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: லைலா மஜ்னுக்கள் வாழ்ந்த உலகில்.. சுந்தரம் அபிராமிகளும் இருக்கிறார்களே.. என்ன காரணம்?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அபிராமி கள்ளக்காதல் விவகாரம்-மன நல மருத்துவர்கள் வெளியிடும் பின்னணி

    சென்னை: உலகம் அழகானது. காதல் அதை விட அழகானது என்பார்கள். ஆனால் இப்போது கள்ளக்காதல்களையும் இத்தோடு சேர்த்து விட்டார்கள் போல. எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல்தான். அத்தோடு போனாலும் பரவாயில்லை. கொலையும் செய்கிறார்கள்.

    ஏன் இப்படிக் கொல்கிறார்கள். கொலை வெறியைத் தூண்டுவது எது என்று யோசித்தபோது இதுகுறித்து யாரிடமாவது உளவியல் நிபுணரிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அப்போது நமது மனதில் வந்தார் உளவியல் நிபுணர் மருத்துவர் அபிலாஷா.

     Why Illicit love affairs on rise in Tamil Nadu and other parts?

    இதுகுறித்து உளவியல் நிபுணர் மருத்துவர் அபிலாஷா ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியின் முதல் பகுதி இது.

    கணவன் - மனைவி இடையேயான உறவுகள் போலித்தனமாக மாறக் காரணம் என்ன?

    இன்று இருக்கும் லைப்ஸ்டைல் மாற்றங்கள் முக்கிய காரணமாக சொல்லலாம். கணவன்- மனைவி அன்னியோன்யம் என்பது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. தங்கள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்காக செலுத்தும் கவனத்தை அவர்கள் தம்பதிகளாக மாறிய பிறகு கவனம் செலுத்துவதில்லை. கணவன்- மனைவி இருவரும் தங்களது எதிர்பார்ப்புகள் இதுதான், இதில் அவர்கள் தகுதியாக இருக்க வேண்டும். இருவரும் அடம்பிடிக்கிறார்கள். இன்று கணவன் - மனைவி பணிக்கு செல்வதால் மனம் விட்டு பேசுவதற்கு நேரமே இல்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பதில்லை. மாறாக தனித்தனியாக இருப்பதால் இது என் இஷ்டம், நான் இப்படிதான் இருப்பேன், இது என் முடிவு என நினைக்கிறார்கள். இதற்கு இடைஞ்சலாக இருக்கும் போது அந்த உறவு தனக்கு தேவையில்லை என்கிற அளவுக்கு யோசிக்கிறார்கள். சினிமாவை எடுத்துக் கொண்டால் ஒரு ஹீரோவும், ஹீரோயினும் எப்பவுமே ஒன்றாக இருப்பது என்பது இயலாத ஒன்று. பீச்சில் இருப்பார்கள், ஷாட்டில் இருப்பார்கள், இதை பார்க்கும்போது கணவன் - மனைவி இப்படிதான் இருக்க வேண்டும் போல, நமக்கு இப்படி இல்லையே என்ற எண்ணம் உருவாகிறது.

     Why Illicit love affairs on rise in Tamil Nadu and other parts?

    கள்ளக்காதல்கள் நடப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

    கள்ளக்காதல்கள் இன்று பெருகுவதற்கு முக்கியமான காரணம் சமூகவலைதளங்கள். இன்று ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ சமூகவலைதளங்கள் மூலம் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். விளையாட்டாக ஆரம்பித்து சில நேரங்களில் விபரீதமாக முடிகிறது. இல்லாட்டி விபரீதமாகவே ஆரம்பிப்பதும் உண்டு. என்ன நடக்கும் என்பதே தெரியாமல் ஒரு திரில்லுக்காகவும் விளையாட்டுக்காகவும் ஆரம்பிக்கிறார்கள். இது அவர்களையே அறியாமல் ஒரு பிரச்சினையில் தள்ளிவிடுகிறது.

    கள்ளக்காதலில் ஈடுபடுவோர் ஒரு வித ஈர்ப்பையும், ஆடம்பர வாழ்க்கையையும் விரும்புகிறார்களா?

    ஈர்ப்பும் இருக்கிறது, ஆடம்பர வாழ்க்கைக்காகவும், விளையாட்டுக்காகவும் இருக்கிறது. சும்மா செய்துதான் பார்ப்போமே. ஒரு கணவன்- மனைவியை எடுத்துக் கொண்டால் ஒருவருக்கு ஒருவர் புகழ்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் புதிதாக வரும் நபர் நீ அழகாய் இருக்கிறாய், உனது கண், மூக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்பார்கள். அதற்கு மயங்குவோரும் உண்டு.

    கள்ளக்காதல்கள் பெருக என்ன காரணம்?

    கள்ளக்காதல்கள் பெருக ஆசை வார்த்தைகளும் காரணம். நீ இப்படி வாழ வேண்டியவளே இல்லை. என்னுடன் வந்து விடு நான் உன்னை நல்லபடியாக வாழ வைப்பேன் என்பார்கள். உன்னை மகாராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன், அப்படி இப்படினு சொல்லும்போது உள்ளுக்குள் ஒரு ஆசை வரும். அதாவது இந்த வாழ்க்கையை விட்டு இதை விட சிறந்த வாழ்க்கைக்கு நாம் செல்ல வேண்டும் போல என ஆசை வரும். இருவரும் ஒரு வீட்டுக்குள் இருக்கும்போது ஈகோ, கருத்து வேறுபாடு, தவறாக புரிந்து கொள்வது உள்ளிட்டவை இருக்கும். சொந்தக்காரர்களால் ஏற்படும் பிரச்சினைகள் இவையெல்லாம் பேசி தீர்த்து கொள்வதற்கு நேரம் இல்லாமல் வளர்ந்து கொள்ளே போகும். தற்போது ஒரு பாசிட்டிவிட்டியே இல்லாத நிலை உள்ளது. அப்போதெல்லாம் விரதம் இருப்பார்கள், குடும்ப உறவுகள் ஒன்றாக கூடுவது உண்டு. ஆனால் இப்போது உறவினரின் இல்ல விஷேசங்களுக்கு கூட பரிசை கொடுத்துவிட்டு வந்து விடும் மனநிலைதான் இருக்கும். அதற்காக முழுவதும் அந்த காலத்துக்கே திரும்புங்கள் என்று நான் கூறவில்லை.

    நான் சொல்ல வருவது என்னவெனில் ஒரு விழாவுக்கு யாராவது ஒருவர் போனால் நன்றாக இருக்கும் என்பதை விட்டுவிட்டு இருவரும் சேர்ந்து அந்த விழாவுக்கு செல்வது, அங்கு இருவரும் மனம்விட்டு சிரித்து பேசுவது, மற்ற தம்பதிகள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பது மிகவும் முக்கியம். இத்துடன் டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் தகாத உறவே பிரதானமாக காட்டப்படுகிறது. மக்களை ஈர்க்க கள்ளக்காதலை மையப்படுவதுதான் இருக்கிறதா, எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு விளையாட்டு வீராங்கனை எப்படி கஷ்டப்பட்டு ஒலிம்பிக் வரை செல்கிறாள் என்பது போன்ற சீரியல்களை எடுக்கலாம். இதை பார்க்கும்போது மக்களும் கள்ளக்காதல் என்பது பெரிய தவறில்லை போல, ஊருக்கு ஊர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமக்கென வரும் போது அதை பார்த்துவிட்டு பயந்து ஓடுவது இல்லாமல் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமே என்ற ஒரு துணிச்சலை கொடுக்கும்.

    [பகுதி: 1, 2, 3, 4]

    {document1}

    English summary
    Everywhere Illegal love affairs, See Kundrathur Abirami case. We talked to Famous psychologist Abhilasha about this. Here is the interview.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X