For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் சிவமூர்த்தி கொல்லப்பட்டது ஏன்?- கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்.. ஏவிவிட்டவரும் கைது

திருப்பூர் சிவமூர்த்தி கொல்லப்பட்டது ஏன் என்பது தொடர்பாக கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் உறவினர் கொலை..திடுக்கிடும் தகவல்கள்- வீடியோ

    திருப்பூர்: திருப்பூர் தொழிலதிபர் சிவமூர்த்தி கள்ளக்காதல் பிரச்சினையால் கொலை செய்யப்பட்டதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்தனர். கூலிப்படையினரை ஏவிவிட்ட மூர்த்தி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

    திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் சிவமூர்த்தி. இவர் கோவை சென்று வருவதாக கடந்த 3 நாட்களுக்கு முன் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் பதறிய சிவமூர்த்தியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே ஆம்பூரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதன் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் நின்றிருந்தனர்.

    மடக்கி பிடித்தனர்

    மடக்கி பிடித்தனர்

    அப்போது ஆம்பூர் நெடுஞ்சாலை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த கார் அருகே சென்றபோது அந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் எப்படியோ அவர்களை மடக்கிபிடித்தனர்.

    உடல் வீச இடம் தேடி...

    உடல் வீச இடம் தேடி...

    விசாரணையில் சிவமூர்த்தியை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும் அவரை மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காட்டில் கொலை செய்துவிட்டு உடலை எங்கே வீசியெறிவது என்பது குறித்து தெரியாமல் சடலத்துடன் 2 நாட்களாக காரில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தனர். சென்னை அடையாறு ஆற்றில் சடலத்தை வீச திட்டமிட்டு அது நடைபெறாததால் பெங்களூர் சென்றுள்ளனர்.

    3 பேர் கைது

    3 பேர் கைது

    அப்போது அங்கு ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் சடலத்தை டேப்பால் சுற்றி மைல்கல்லை வைத்து கட்டி வீசியுள்ளனர். இந்நிலையில் மைல்கல் சிறியதாக இருந்ததால் சடலம் மிதந்தது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    கள்ளக்காதல்

    கள்ளக்காதல்

    3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர். அதில் சிவமூர்த்தியின் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கும் சிவமூர்த்திக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதை அந்த பெண்ணின் கணவர் மூர்த்தி தட்டி கேட்டும் இருவரும் கேட்கவில்லை.

    மேலும் ஒருவர் கைது

    மேலும் ஒருவர் கைது

    இதனால் சிவமூர்த்தியை கொல்ல கூவி படைகளை ஏவிவிட்டார் என்று வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மூர்த்தியையும் போலீஸார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்காக தொழிலதிபரை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    4 were arrested in connection with Industrialist Sivamoorthy murder case. Here are the murderer statement why they murder Sivamoorthy?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X