For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்- வீடியோ

    மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து
    நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

    இதனால் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளும் முடக்கப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    நீதிமன்றம் கேள்வி

    நீதிமன்றம் கேள்வி

    இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி தவிர மற்ற இரண்டு மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியது.

    இன்டர்நெட் முடக்கம் ஏன்?

    இன்டர்நெட் முடக்கம் ஏன்?

    தூத்துக்குடியில் போராட்டம் நடந்ததால் மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் முடக்கம் ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இன்டர்நெட் முடக்கம் தொடர்பாக அரசு தரப்பு 3 மணிக்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

    2 மாவட்டங்களுக்கு சேவை

    2 மாவட்டங்களுக்கு சேவை

    அதற்குள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு 8 பேர் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நாளையே முடிவு செய்ய வேண்டும்

    நாளையே முடிவு செய்ய வேண்டும்

    அதன்படி வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி இணையதள சேவை குறித்து நாளை முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இணையதள சேவை மறு ஆய்வு குழு நாளையே முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

    English summary
    Madurai High court bench asks Tamilnadu govt Why Internet service disabled in Kanniyakumari and Nellai. Court orders Govt to answer by 3pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X