For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா உடல்நலம் பற்றிய செய்திகளை இப்போது கசியவிட காரணம் என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்பது குறித்த தகவலை இப்போது வெளியிட காரணம் தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பவா என்ற கேள்வி பல தளங்களிலும் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைந்த நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அதுபற்றி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று திடீரென அவர் மருத்துவமனையில் இருந்து பேசியதாக கூறி சில ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் திடீரென மீடியாக்களுக்கு கசிந்துள்ளன.

ஊடக கவனம்

ஊடக கவனம்

இதையடுத்து ஊடகங்களின் கவனம் அந்த செய்தி பக்கம் இயல்பாகவே திரும்பியது. இதனிடையே நெட்டிசன்களோ, இவ்வாறு, ஒரு ஆடியோ இப்போது தேவையில்லாமல் வெளியிட அவசியம் என்ன என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.

சாப்பாடு லிட்ஸ்

சாப்பாடு லிட்ஸ்

02.08.2016ல் ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் என்ற பெயரில் வெளியாகியுள்ள பட்டியலில், காலையில் ஒன்றரை இட்லி, 4 ரொட்டி துண்டுகள், காபி, இளநீர், ஆப்பிள், பிஸ்கட், மதிய உணவாக சாதம், தயிர், முலாம்பழம், இரவு உணவாக உலர் பழங்கள், இட்லி உப்புமா, தோசை, ரொட்டி, பால் சாப்பிடுவதாக ஜெயலலிதா கைப்பட எழுதி வைத்துள்ளதாக அந்த குறிப்பு வெளியாகியுள்ளது.

சுப.வீரபாண்டியன் சந்தேகம்

இதுகுறித்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் டுவிட்டரில் கூறுகையில், ஜெயலலிதா இட்லி, ரொட்டி, ஆப்பிள் கேட்ட குறிப்பும், .அவருடைய குரல் பதிவு ஒன்றும் வெளியாகி உள்ளது. உப்புச் சப்பற்ற இந்தச் செய்திகள் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றன? யாரும் தூத்துக்குடி பற்றிப் பேசாமல், இது குறித்துப் பேசுங்கள் என்பதற்குத்தான். இவ்வாறு கூறியுள்ளார்.

திசை திருப்பம்

ஸ்டெர்லிட் விவகாரம் திசைதிருப்பும் வகையாவே ஜெயலலிதா பேசிய ஆடியோ ரிலீஸ்.. ஆஹா என்ன ஒரு திட்டம் !!! இப்படி கூறுகிறார் இந்த நெட்டிசன்.

English summary
Why Jayalalitha audio released now when people's focus on Sterite issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X