For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சண்முகநாதன் டிஸ்மிஸ்க்கு காரணமான சாத்தான்குளம் டீச்சர், புவனேஸ்வரன், சசிகலா புஷ்பா விவகாரங்கள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து எப்பவோ நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சண்முகநாதன் நேற்று தூக்கியடிக்கப்பட்டுள்ளார். சண்முகநாதனும் சர்ச்சைகளும் பஞ்சாயத்துகளும் பின்னிப் பிணைந்தவை...

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சண்முகநாதன் மீது 2014-ம் ஆண்டு பகீர் புகார் ஒன்று கிளம்பியது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் சண்முகநாதன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக கூறி அந்த ஆசிரியையின் கணவரே நீதிமன்றப் படிக்கட்டுகளேறினார்.

Why Jayalalithaa drops Shanmuganathan from Cabinet?

சாத்தான்குளம் தட்டார் மடத்தைச் சேர்ந்த இன்பராஜின் மனைவியாக இருந்த ஆசிரியை லீமா ரோஸுக்கும் அமைச்சர் சண்முகநாதனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் லீமா ரோஸ் வீட்டுக்கே சண்முகநாதன் போய்வர வெறுத்துப் போன இன்பராஜ் விவகாரத்து பெற்றுவிட்டார். அதன் பின்னர் சொத்துகளில் லீமாரோஸுக்கும் பங்கு தர வேண்டும் என்று சண்முகநாதனின் ஆட்கள் மிரட்ட இன்பராஜ் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். அப்போது இந்த கள்ளத் தொடர்பு விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து நாசேரத்தை சேர்ந்த சில இளம்பெண்களுடன் சண்முகநாதன் நெருக்கமாக இருப்பதாகவும் புகார் கிளம்பியது.

சட்டசபை தேர்தலின் போது சண்முகநாதன் குடும்பம் சீட் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்தது. அப்போது ஒரு வாட்ஸ் அப் வீடியோ ரிலீஸாகி பெரும் பரபரப்பை கிளப்பியது

''வரும் தேர்தலில் உறுதியாக சீட் வாங்கித்தருவதாகவும், சீட் வாங்கித்தர நானே முழுப் பொறுப்பு என்றும், அமைச்சரின் மகனைப் பார்த்து பேசிவிடுவோம்'' என மதுரையைச் சேர்ந்த சீனுகந்தசாமி, அவரது ஆதரவாளர் மற்றும் சீட் கேட்பவர் ஆகிய மூன்று பேரும் சுமார் 5 நிமிடம் 24 நொடி வரை பேசும் வீடியோ வாட்ஸ் அப் மூலம் வெளியானது. இதில் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தி கைது செய்யப்பட்டார் . (/news/tamilnadu/minister-pa-arrested-cheating-admk-sheet-aspirants-249123.html)

இந்த வீடியோ வைரலாகப் பரவ போயஸ் கார்டன் கடும் கோபம் கொண்டது. இதனால் சட்டசபை தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக புவனேஸ்வரனை முதலில் அறிவித்தது அதிமுக மேலிடம்.

ஆனால் இங்கேயும் உள்ளடி வேலை பார்த்தார் சண்முகநாதன். புவனேஸ்வரன் மீது போலியான ஒரு கொலை முயற்சி புகார் கொடுக்க வைத்தார். பின்னர் சசிகலா புஷ்பாவுக்கு இருந்த அப்போதைய செல்வாக்கு மூலமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார் சண்முகநாதன்.

அண்மையில்தான் புவனேஸ்வரனை சண்முகநாதன் வகையாக மாட்டிவிட்டு நல்ல பெயர் எடுத்த கதை அதிமுக மேலிடத்துக்கு தெரியவந்தது.. அதே நேரத்தில் சசிகலா புஷ்பா விவகாரமும் வெடித்துக் கொண்டிருந்தது. இதனால் முதல் கட்டமாக சண்முகநாதனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு பின்னர் அமைச்சர் பதவிக்கும் ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது...

இதுதான் சண்முகநாதன் அடியோடு வீழ்ந்ததன் பின்னணி என்கின்றனர் அதிமுகவினர்...

English summary
Here the Reasons of Shanmuganathan dropped from TN Cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X