For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேஸ் போட்டா நான் இதை செய்வேன்.. அரசை கருணாஸ் மிரட்டியதை கவனித்தீர்களா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசுக்கு கருணாஸ் சவால்-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் எப்பொழுது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற சூழ்நிலை வந்துவிட்டதாக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    எஸ்.வி.சேகர் மோசமான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் சொல்லலாம், எச்.ராஜா பல படிகள் மேலே போய் உயர்நீதிமன்றம், காவல்துறையையே மோசமாக வசைமாரி பொழியலாம் என்று இருந்த நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது எம்எல்ஏ கருணாஸ் சேர்ந்துள்ளார்.

    மேற்சொன்ன மூவர் மீதும் இதுவரை காவல் துறையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை, இந்த நிமிடம் வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.

    கிண்டல், கேலி

    கிண்டல், கேலி

    இவர்களையெல்லாம் தேடுவதற்கு அமைக்கப்பட்ட தனிப்படைகளை, தேடுவதற்கு இன்னொரு தனிப்படை அமைக்க வேண்டிய சூழ்நிலை, தமிழகத்தில் உள்ளதாக கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். "ஏன் இவர்களால் தப்பிக்க முடிகிறது? பின்னணி என்ன? எஸ்வி சேகர் மற்றும் ராஜா இருவரும் மத்தியில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள். அவர்களைப் பகைத்துக் கொண்டால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் இங்கே ஆளுபவர்கள் இடம் உள்ளது" என்கிறார் ஒரு அரசியல் பார்வையாளர்.

    ஜாதி பிரச்சினை

    ஜாதி பிரச்சினை

    இந்த டெக்னிக்கைதான் சரியாக பிடித்து கொண்டார் கருணாஸ். பெண்களை வைத்து எஸ்வி சேகர் மோசமாக பேசினார். மதத்தை வைத்து பிரச்சினையை உண்டு செய்ய ராஜா முயன்றார். ஜாதியை வைத்து கொந்தளிப்பை ஏற்படுத்தி கருணாஸ் முயற்சி செய்துள்ளார். ஒவ்வொருவருமே கிட்டத்தட்ட சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரே நான் அடிப்பேன் என பயப்படுகிறார் என கருணாஸ் ஒரு படி மேலே போய் கூற தைரியம் வந்தது எதனால்?

    தனிப்படை

    தனிப்படை

    இதற்கும் ராஜா போன்றோர் பயன்படுத்தும் அதே மிரட்டல் தந்திரம் தான் காரணம். இன்று கருணாஸ் அளித்த பேட்டியில் அது வெளிப்பட்டது. கருணாசுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நிருபர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ் கூறிய ஒரு வார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    எம்எல்ஏக்கள் பலம்

    எம்எல்ஏக்கள் பலம்

    கூவத்தூர் விடுதியை ஏற்பாடு செய்தது தான் தான் என்றும் அங்கே சசிகலா உள்ளிட்டவர்கள் செய்த ஏற்பாட்டினால் தான் இந்த ஆட்சி இருக்கிறது என்றும் கூறி இருந்த கருணாஸ், என்று ஒரு படி மேலே போய் கூறியது இதுதான். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் மனுவாக அளிக்க உள்ளதாக கூறியுள்ளார் கருணாஸ். ஏற்கனவே ஆட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் பலம் கம்மியாக உள்ளது. அந்த வழக்கின் முடிவைப் பொறுத்து தான் தமிழக அரசியல் அடுத்த கட்டத்திற்கு செல்ல போகிறது.

    ராஜா விவகாரம்

    ராஜா விவகாரம்

    எம்எல்ஏக்கள் பலம் இல்லாத சூழ்நிலையில் அமைச்சரவை மாற்றம் கூட செய்ய முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. எனவே கருணாசும் அதே பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். ராஜாவை கைது செய்தால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதால் அவரை விட்டு வைத்திருப்பது போல, நாமும் ஆட்சியை அச்சுறுத்தும் விவகாரத்தை கையில் எடுத்தால் எதையும் பேசி தப்பலாம் என்ற எண்ணத்திற்கு கருணாஸ் வந்துவிட்டார். இப்படி ஆளாளுக்கு ஆட்சியை காட்டி மிரட்டியே பேசிக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் சட்டம் ஒழுங்கு என்பது சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது என்பதையே கூறி கூட ஆட்சியை கலைக்க முடியும் அல்லவா?

    அம்மா ஆட்சி

    அம்மா ஆட்சி

    இதையெல்லாம் ஆட்சியாளர்கள் உடனே சிந்தித்து இதுபோன்ற தந்திர நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். அம்மாவின் ஆட்சி என்று கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமி, அவரது பாணியில் சமூக ஒற்றுமையை குலைக்கும் விஷமிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது அதிமுகவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை.

    English summary
    Why Karunas threaten CM at his speech, after H.Raja?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X