For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிள்ளையாரை வைத்து ஆற்றை காத்த முன்னோர்கள்!

பிள்ளையார் சிலையை நீரில் கரைத்தால் நீர்மட்டம் உயரும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிள்ளையாரை வைத்து ஆற்றை காத்த முன்னோர்கள்!

    சென்னை: நம் முன்னோர்கள்தான் எவ்வளவு சிந்தனை மிக்கவர்கள்! எவ்வளவு புத்திசாலிகள்!!

    ஒவ்வொரு செயல்பாட்டையும், ஒவ்வொரு பழமொழியையும் காரண காரியங்களாகவே காலங்களை நகர்த்தி கொண்டு வந்திருக்கின்றனர். அதில் எதுவுமே சோடை போனது இல்லை!!!

    விநாயகர் சதுர்த்தியில்கூட நம் முன்னோர்கள் தங்களது அறிவை வெளிப்படுத்தியே காட்டினர். விநாயகர் சதுர்த்தி நடந்து முடிந்ததும் சிலைகளை நீர்நிலைகளிலேயே கரைத்து விடுகிறோம். இதற்கு மதரீதியான காரணங்கள் ஆயிரம் சொல்லப்பட்டாலும் அதில் ஓர் புவியியல் சார்ந்த விஷயம் பொதிந்துள்ளதை இன்றைய தலைமுறைகள் மட்டுமல்ல, அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் அறிந்து கொள்வது அவசியம்.

    நீர் தங்குவதில்லை

    நீர் தங்குவதில்லை

    அந்த காலத்தில் எல்லாம் நிலத்தடி நீர்மட்டம் சீராகத்தான் இருந்து வந்தது. ஆனால் ஆடிப்பெருக்கின்போது கட்டுக்கடங்காத வெள்ளம் வந்துவிட்டால் மட்டும் தண்ணீர் தெறித்து கொண்டு பாய்ந்து ஓடும். வெள்ளம் பாயும் அந்த வேகத்தில், ஆற்றுப்பகுதியிலுள்ள மண்ணையும் சேர்த்து தன்னுடன் அடித்து கொண்டு போய் விடும்.வரும் தண்ணீர் வேகத்தில் கடற்பரப்பில் மணலும் இருப்பதில்லை, நீரும் தங்குவதில்லை. அதனால் அங்கு கண்டிப்பாக நிலத்தடி நீர்மட்டமும் குறையத்தான் செய்யும்.

    களிமண் கரையும்

    களிமண் கரையும்

    இதற்காகத்தான் நம் முன்னோர்கள் ஒரு ஐடியா செய்தார்கள். இப்படி வெள்ளம் வரும்போது மணலும் தங்க வேண்டும், நீரும் தங்கி நீர்மட்டம் உயர வேண்டும் என்று நினைத்தார்கள். ஆற்றுநீரை தடுக்கும் அளவுக்கு கெட்டித்தனம் வாய்ந்த பொருள் களிமண். அதனால் களிமண்ணை ஆற்றில் கரைத்துவிட்டால், அந்த மண் ஆற்றில் கரையும். கரைவதுடன், ஆற்றுநீரையும் தடுத்துவிடும். பிறகு நிலத்தடி நீரும் உயர்ந்துவிடும் என்று கணக்கு போட்டார்கள்.

    ஆவணி மாத விழா

    ஆவணி மாத விழா

    இதற்காக விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தினார்கள். வழிபாட்டுக்காக களிமண் விநாயகரை தேர்ந்தெடுத்தனர். இப்போதுதான் பேஷனுக்காக கடலில் போய் பிள்ளையாரை கரைக்கிறார்கள். ஆனால் அப்போது ஆற்றுப் பகுதியையே தேர்ந்தெடுத்தார்கள். ஏனெனில் அவர்களின் குடிநீர், விவசாயத்தை பாதுகாத்தது பெரும்பாலும் ஆறுகள்தான். வெள்ளப்பெருக்கு ஆடியில் முடிந்ததும், ஆவணி மாதத்தில் இந்த விநாயகர் சதுர்த்தியை நடத்தவும் முடிவு செய்தார்கள்.

    பூமியில் உறிஞ்சப்பட்ட நீர்

    பூமியில் உறிஞ்சப்பட்ட நீர்

    விநாயகரை களிமண்ணால் செய்து அன்றைய தினமே கடலில் போட்டால் அதுவும் அப்போதே கரைந்துவிடும். அதனால்தான் களிமண் கெட்டித்தன்மை ஆகட்டும் என்று 3 நாள் அல்லது 5 நாள் விட்டு ஆற்றில் கொண்டு போய் போட்டார்கள். கணித்த கணிப்பு சரியாகவே இருந்தது. பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைக்கும்போது, அந்த இடத்தில் உள்ள நீர் பூமியில் உறிஞ்சப்பட்டது. நிலத்தடி நீரும் அதிகரித்தது. இதனால் நீண்ட காலத்துக்கு நம் முன்னோர்களுக்கு தண்ணீர் பஞ்சமே ஏற்படவில்லை. நம் பிள்ளையாருக்கும் புவியிலுக்கும்தான் எவ்வளவு நெருக்கம்!!!

    English summary
    Why lord Pillayar idol is immersed in water
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X