For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவயானிக்கு துடிக்கும் இந்தியா இசைப்பிரியாவுக்கு வருந்தவில்லையே! - கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Why no sympathy for Isaipriya?: Karunanidhi
தேவயானிக்கு வருந்தும் இந்தியா இசைப்பிரியாவுக்கு வருந்தவில்லையே, என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையின் ஒரு பகுதி:

கேள்வி: அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் "தேவயானி கோப்ரகடே" கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே?

பதில்: நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அந்தப் பிரச்சினை அதிகமாகப் பேசப்பட்டு, இந்திய அரசு அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்தது பற்றியெல்லாம் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுள்ளன.

ஆனால் அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப் பிரியாவிற்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
DMK leader M. Karunanidhi on Tuesday said he was saddened by the fact that the Indian government was least bothered about the brutal killing of Isaipriya, a Sri Lankan Tamil broadcaster, but showed a lot of interest in the case of Devyani Khobragade, the Indian diplomat in New York
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X