For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே பதவியேற்றது ஏன்? ஓபிஎஸ்க்கு தம்பிதுரை கேள்வி

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது ஏன் என எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: அதிமுகவில் இரு அணிகள் இல்லை என எம்பியும் லோக்சபா துனை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக எம்பியும், லோக்சபா துனை சபாநாயகரும் சசிகலாவின் தீவிர ஆதரவாளருமான தம்பிதுரை கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவில் இரு அணிகள் இல்லை. ஒரே அணிதான் என்று அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவருடைய மரணம் இயற்கையான மரணம் தான் என்றும் எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அடக்கத்துக்கு முன் பதவியேற்றது ஏன்?

அடக்கத்துக்கு முன் பதவியேற்றது ஏன்?

அவர் மேலும் பேசியதாவது, இதற்கு முன்பு தமிழகத்தில் முதல்வர்கள் இறந்தால் அவர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு தான் சட்டசபையைக் கூட்டி அடுத்த முதல்வர் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யபடுவதற்கு முன்பே பன்னீர்செல்வம் பதவி ஏற்றது ஏன்?

மக்களை திசை திருப்புகிறார்கள்

மக்களை திசை திருப்புகிறார்கள்

சசிகலா பொதுசெயலாளராக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் மதுசூதனன் மற்றும் பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் கையெழுத்திட்டுதான் சசிகலா பொறுப்பை ஏற்றார். ஆனால் இப்போது மக்களைக் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படி பேசி கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசு இணக்கமாகத்தான் உள்ளது

மத்திய அரசு இணக்கமாகத்தான் உள்ளது

மத்திய அரசு ,மாநில அரசோடு இணைக்கமாக தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது .அவர்கள் மாநில அரசு உரிமைகளிலில் தலையிடுவதில்லை.

ஜெ.மரணத்தில் சந்தேகம் இல்லை

ஜெ.மரணத்தில் சந்தேகம் இல்லை

அதிமுக அணி என்பது ஒரே அணி தான் வேறு அணி எதுவும் இல்லை எனவும்

ஜெயலிதா இறந்தது இயற்கையான மரணம் தான், அதில் சந்தேகம் ஏதுமில்லை.

English summary
MP Thambidurai asking why ops had taken oath as CM before Jayalalitha's body buried. And he said there is only one team in ADMK. No two teams and all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X