For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரிவேந்தருக்கு என்னாச்சு... அறிவாலயம் பக்கம் தலைகாட்ட தயங்குவது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.யுமான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் இதுவரை கலந்துகொள்ளவில்லை.

அவர் சார்பாக ஐ.ஜே.கே. பொதுச்செயலாளர் ஜெயசீலன் மற்றும் அவரது மூத்த மகன் ரவி ஆகியோர் தான் கலந்துகொள்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூரில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றவர். அப்படியிருக்க திமுக நடத்தும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் இருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறார். கடைசியாக அவர் அண்ணா அறிவாலயம் வந்தது, தேர்தலில் வெற்ற பெற்றமைக்காக ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறுவதற்கு தான். அதற்கு பிறகு தேனாம்பேட்டை பக்கமே ஆளை பார்க்கமுடிவதில்லை.

Why parivandher reluctant to come on anna arivalayam?

இவரைப்போல் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், சகஜமாக அறிவாலயம் வருகிறார், திமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர்கள் திமுகவுடன் சுமூகமாகதான் உள்ளனர். ஆனால், பாரிவேந்தர் மட்டும் விதிவிலக்காக வெற்றி பெற்றதோடு சரி அதன் பின் அறிவாலயம் வர தயக்கம் காட்டிவருகிறார். இவர் தமிழகம், சிக்கிம், ஆந்திரா, என பல மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் அதிகம் ஒட்டி உறவாடி அதனால் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என நினைக்கிறாராம்.

நிம்மதியின்றி தவிக்கும் செந்தில்பாலாஜி... குடைந்தெடுக்கும் மத்திய குற்றப்பிரிவுநிம்மதியின்றி தவிக்கும் செந்தில்பாலாஜி... குடைந்தெடுக்கும் மத்திய குற்றப்பிரிவு

ஏற்கனவே இவரது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தருவதாக இருந்து கடைசி நேரத்தில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என ரத்து செய்தார். தேவையின்றி மத்திய அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம் என அவர் நினைப்பதாகவும், அதன் காரணமாகவே தன் சார்பில் தனது கட்சி பிரதிநிதிகளை மட்டும் திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தான் நாடாளுமன்றத்துக்கு சென்றது போல் தனது கட்சி சார்பில் ஒருவரை வரும் 2021-ல் சட்டமன்றத்துக்கு அனுப்ப பாரிவேந்தர் ஆசைப்படுகிறாராம்.

English summary
Why parivandher reluctant to come on anna arivalayam?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X