For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானாவை விட தமிழகத்தில் அதிகவிலைக்கு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதேன்: டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தெலுங்கானா மாநிலம் மிக குறைந்த விலையிலான சோலார் மின் திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தைகொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட இது ரூ. 1.84 குறைவு என்பதால் அதானி நிறுவனத்துடன் அரசு போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு கடைபிடித்து வரும் சூரிய ஒளி மின்சாரக் கொள்முதல் முறை மிகவும் தவறானது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாத தமிழக அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயித்திருக்கிறது.

அதானி குழும ஒப்பந்தம்

அதானி குழும ஒப்பந்தம்

அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் மின்சாரத்தையும்,மேலும் 31 தனியார் நிறுவனங்களிடமிருந்து 436 மெகாவாட் மின்சாரத்தையும் ஒரு யூனிட் ரூ.07.01என்ற விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

இழப்பு எவ்வளவு

இழப்பு எவ்வளவு

தெலுங்கானாவில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதில், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் யூனிட்டுக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்படும்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஒப்பந்தங்கள் கையெழுத்து

அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இதுவரை 1084 மெகாவாட்சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2722 மெகாவாட் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன.

தமிழக மின்வாரியம்

தமிழக மின்வாரியம்

இந்த அளவு மின்சாரம் ரூ.07.01என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டால் தமிழகத்திற்கு சுமார் ரூ.34,254 கோடி இழப்பு ஏற்படும். தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே பேரிழப்பை எதிர்கொள்ளும் நிலையில் இதையும் தாங்க முடியாது.

மத்திய பிரதேச மின்வாரியம்

மத்திய பிரதேச மின்வாரியம்

மத்தியப் பிரதேச மின்வாரியம் மொரிஷியஸ் நாட்டு நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ.05.05 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போதே தமிழ்நாடு மின்வாரியம் அதன் சூரியஒளிமின்சார கொள்முதல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு அதன் நிலையை இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை.

செலவு குறைவு

செலவு குறைவு

கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு வரை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு அதிக செலவு ஆனது. ஆனால், சூரிய ஒளி மின்திட்டங்கள் இப்போது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதன்உற்பத்திச் செலவு பெருமளவில் குறைந்து விட்டது. அதேபோல், சூரிய ஒளி மின்சாரத்தின் விலையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த யூனிட் 10 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைந்து விட்டது.

English summary
PMK founder Dr. Ramadoss asked Electricity Minister Natham Viswanathan why the Tamil Nadu Generation and Distribution Corporation Limited (Tangedco) buy solar power from the Adani Group at Rs.7.01 per unit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X