For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ் ஏன்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்- வீடியோ

    சென்னை: மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது.

    உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற பெருமை பெற்றது, சென்னை மெரினா கடற்கரை. அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்கள் நினைவிடங்கள் இங்கு அமைந்துள்ளன.

    Why petition to prevent construction of memorials in Marina beach withdrawn?

    ஆனால் மெரினாவில் இப்படி நினைவிடங்களை அமைப்பது சரியில்லை என்று டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி உள்ளிட்ட பலரும்
    எதிர்ப்பு தெரிவித்து தனித்தனியாக வழக்குத் தொடந்தனர்.

    இந்நிலையில் வழக்கறிஞர் காந்திமதி என்பவர் மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.இன்று மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது,
    அந்த மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    திடீரென ஏன் அவர் மனுவை வாபஸ் பெற முடிவெடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதற்கு அவர் தரப்பில் இன்னும் பதில் அளிக்கவில்லை.

    English summary
    Madras HC dismisses as withdrawn the petition, which sought a direction to prevent construction of memorials in Marina beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X