For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்!

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தமது இலங்கை பயணம் ரத்தானதற்கு தமிழக தலைவர்கள்தான் காரணம் என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் குற்றச்சாட்டு பொய்யானது.. உண்மையில் நடந்த சம்பவங்களே வேறு என்கின்ற யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள்.

சர்ச்சைக்குரிய லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவதாக கூறுகிறது. இதில் 150 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ஏப்ரல் மாதம் வவுனியாவில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. லைக்காவின் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி இருந்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ரஜினியின் குடும்ப நண்பர் மூலம் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார்.

ரஜினி அறிக்கை

ரஜினி அறிக்கை

இதனிடையே ரஜினிகாந்த் திடீரென பொங்கி எழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் திருமாவளவன், வைகோ, வேல்முருகன் தம்மிடம் பல கருத்துகளை தெரிவித்தனர்; அதை ஏற்காவிட்டாலும் அவர்களது வேண்டுகோளை மதித்து இலங்கைக்கு செல்லவில்லை எனக் கூறியிருந்தார். மேலும் புனிதப் போர் நடந்த பூமி அதை பார்க்க ஆவலுடன் இருந்தேன் என்றெல்லாம் திடீரென தமிழீழப் பாசத்தை வெளிப்படுத்தியும் இருந்தார் ரஜினிகாந்த்.

திருமா, வேல்முருகனுக்கு எதிராக...

திருமா, வேல்முருகனுக்கு எதிராக...

ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்தே யாழ்ப்பாணத் தமிழர்கள் சிலரை அழைத்து வைத்து ரஜினிக்கு ஆதரவாகவும் திருமாவளவன், வேல்முருகனை கண்டித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் விடுதலைப் புலிகளின் பெயரில் ஒரு பொய்யான அறிக்கை ஒன்றும் திருமாவளவனுக்கு எதிராக வெளியிடப்பட்டிருந்தது. மேலும் லைக்கா நிறுவனம் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியதாக வேல்முருகன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து ரூ10 கோடி நட்ட ஈடும் கோரப்பட்டது.

விக்னேஸ்வரன் அனுமதி இல்லையாம்

விக்னேஸ்வரன் அனுமதி இல்லையாம்

இதனிடையே ரஜினிகாந்த் உண்மையில் இலங்கை பயணம் செல்லாததற்கு தமிழக தலைவர்கள் காரணம் அல்ல என்கின்றன யாழ்ப்பாணத் தகவல்கள். அதாவது இலங்கை அரசின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதனால் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஒப்புதலைப் பெறாமலேயே அழைப்பிதழில் அவரது பெயரை அச்சிட்டனராம். இதை முன்வைத்தே ரஜினியிடமும் அவர்கள் எல்லாம் வருகிறார்கள் என கூறி அனுமதியும் பெற்றனராம்.

விக்னேஸ்வரன் கொந்தளிப்பு

விக்னேஸ்வரன் கொந்தளிப்பு

இந்த தகவல் விக்னேஸ்வரனுக்கு சென்றடைந்ததும் அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். நாங்களே இலங்கை மத்திய அரசுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம்; ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு இணக்கமான ஒரு நிகழ்வில் எப்படி நான் கலந்து கொள்வேன் என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறாராம் விக்னேஸ்வரன்.

ரஜினியின் அறிக்கையின் பின்னணி

ரஜினியின் அறிக்கையின் பின்னணி

அத்துடன் தாம் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டாராம். விக்னேஸ்வரன் கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற போது தாம் எப்படி கலந்து கொள்வது என்ற குழப்பத்தில்தான் ரஜினி இருந்தாராம். அதே நேரத்தில் தமிழக தலைவர்கள் மீது கோபத்தில் இருந்த கோஷ்டிதான், இப்படி ஒரு அறிக்கை வெளியிடுங்கள்... அவர்களை ஈழத் தமிழர்களுக்கு எதிரானதாக திசை திருப்பிவிட்டது போன்றும் இருக்கும்... உங்கள் இமேஜூம் கூடும் என கூறியுள்ளனராம். இதையடுத்து சரித்திரம் பேசும் ரஜினிகாந்தின் அந்த அறிக்கை வெளியானது என அதிரவைக்கின்றனர் யாழ்ப்பாண தமிழர் வட்டாரங்கள்.

English summary
According to the Jaffna sources here are the real reasons for Super Star Rajinikanth's Srilanka trip Cancel issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X