For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி... தொடரும் தெருவோர பேட்டிகள்.. எப்ப சார் வீட்டுக்குள் கூப்பிடுவீங்க.. ஏக்கத்தில் நிருபர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - ரஜினி கருத்து

    சென்னை: ரஜினிகாந்த் தொடர்ந்து தெருவோரத்திலேயே நின்று பேட்டி கொடுத்து வருவது செய்தியாளர்களை சோர்வடைய வைத்துள்ளது.

    பிரஸ் மீட் என்பதற்கு புது அர்த்தத்தை ஏற்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். அவரது சமீப கால பிரஸ்மீட்கள் எல்லாமே கிட்டத்தட்ட "ஸ்ட்ரீட் மீட்"டாக மாறியுள்ளன. தனது வீட்டுக்கு வெளியே, கேட்டுக்கு முன்பு நின்று .. அதாவது தெருவில் வைத்துத்தான் பேட்டி தருகிறார் ரஜினி.

    இது செய்தியாளர்களை சங்கடப்படுத்தி வருகிறது. ஆனால் இதுவரை யாரும் இதுகுறித்து ரஜினியிடம் சொன்னது போல தெரியவில்லை. அவர்களது கடமை, ரஜினியின் கருத்தைப் பெற்று மக்களிடம் சேர்ப்பிப்பது என்ற அளவிலே அமைதியாக உள்ளனர்.

    நீதானே.. நீதானே.. விஜய் பட ரிங்டோனைக் கேட்டு ஜெர்க் ஆன ரஜினிகாந்த்! நீதானே.. நீதானே.. விஜய் பட ரிங்டோனைக் கேட்டு ஜெர்க் ஆன ரஜினிகாந்த்!

    சம்பிரதாயம்

    சம்பிரதாயம்

    பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் பேட்டிகள் அவர்களது கட்சி அலுவலகம், வீடுகளாக இருந்தால் வீட்டு வரவேற்பரை என்ற அளவில்தான் பிரஸ்மீட் எனப்படும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும். உட்கார வைத்து பேசுவதுதான் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கடைப்பிடிக்கும் சம்பிரதாயம். பொது இடங்களாக இருக்கும்பட்சத்தில் தலைவர்களும் நின்றபடி பேசுவார்கள், செய்தியாளர்களும் நின்று கொண்டே கேள்வி கேட்பார்கள். இது இயல்பானது.

    மதிப்பது கடமையாச்சே

    மதிப்பது கடமையாச்சே

    அதேசமயம், நம் வீடு தேடி வந்தோரை உள்ளே வரச் சொல்லி, உட்கார வைத்து கெளரவிப்பது தமிழ்நாட்டு வழக்கம். ஆனால் ரஜினி விஷயத்தில் இது நடைபெறுவதில்லை. இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் தெருவில் நிறுத்தி பிரஸ்மீட் நடத்தியதாக தெரியவில்லை. அப்படி ஒரு சூழலில் எந்தக் கட்சியும், தலைவரும் செய்தியாளர்களை விட்டதில்லை. விமான நிலையத்தில், ரயில் நிலையத்தில், ஏன் பஸ் நிலையத்தில் கூட பிரஸ்மீட்கள் நடந்துள்ளன.

    தெருவிலேயே

    தெருவிலேயே

    ஆனால் தெருவில் வைத்து ஒரு பிரஸ்மீட் நடக்கிறது என்றால் அது ரஜினி பிரஸ்மீட்டாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. யாரையும் அவமதிக்கும் வகையில் ரஜினி இப்படி நடத்துகிறார் என்று கூறவே முடியாது. காரணம், ரஜினி மரியாதை தெரிந்த பண்பான மனிதர்.. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் தொடர்ந்து தெருவிலேயே பிரஸ்மீட் நடப்பதை ரஜினி ஏன் உணராமல் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

    கெளரவமா இருக்குமே

    கெளரவமா இருக்குமே

    தன்னைத் தேடி வரும் செய்தியாளர்கள், தனது கருத்தை வாங்கி மக்களுக்குத் தெரிவிக்கவே வருகிறார்கள் என்பதை ரஜினி உணர வேண்டும். அப்படி வரும் செய்தியாளர்களை குறைந்தபட்சம் தனது வீட்டின் வரவேற்பரைக்குக் கூட வேண்டாம்.. வளாகத்தில் வைத்தாவது சந்தித்து பேட்டி தரலாம். இத்தனைக்கும் பெரிய அளவில் கூட்டமும் வருவதில்லை. ஒரு பத்து, 15 பேர் வரைதான் இருப்பார்கள். மிஞ்சிப் போனால் 20 பேர் இருக்கலாம். வீட்டு வளாகத்தில் வைத்து அழகாக சந்திக்கலாம். கெளரவமாகவும் இருக்கும்.

    உள்ளே கூப்பிடுங்க சார்

    உள்ளே கூப்பிடுங்க சார்

    அடுத்த முறையாவது ரஜினி தன்னைத் தேடி வரும் செய்தியாளர்களை தெருவிலேயே நிறுத்தாமல் உள்ளுக்கு அழைத்து பேட்டி கொடுத்து அனுப்பினால், ரஜினியிடம் கருத்தை வாங்க கால் கடுக்க காத்திருக்கும் செய்தியாளர்கள் சற்று தன்மானமாக உணர்வார்கள்.. சந்தோஷமாகவும் திரும்பிச் செல்வார்கள். செய்யுங்க சார்!

    English summary
    Superstar Rajinikanth's recent press meets are happening in streets, it is annyoing the reporters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X