For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவை கோபப்படுத்திய 'அந்த' வார்த்தை- சிறையில் காட்டப்பட்ட வீடியோ காட்சிகள்

திவாகரனின் விமர்சனங்களால் சசிகலா கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலாவிடம் திவாகரனைப் போட்டுக்கொடுத்த டிடிவி தினகரன்- வீடியோ

    சென்னை: மன்னார்குடி குடும்பங்களின் அடுத்தடுத்த மோதலை ஆட்சியில் உள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சசிகலாவிடம் சில வீடியோக்களைப் போட்டுக் காண்பித்தார் தினகரன். அதில் சொல்லப்பட்ட விஷயங்கள்தான் சசிகலாவின் கோபத்தை அதிகப்படுத்தின' என்கின்றன குடும்ப வட்டாரங்கள்.

    சசிகலாவின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது' என தினகரன் தரப்பு வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸ், திவாகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ' இரண்டு நாட்களில் ஊடகங்களை சந்திப்பேன்' என ஆதரவாளர்களிடம் பேசிய திவாகரன், இன்று மன்னார்குடியில் மீடியாக்களை சந்தித்தார். எனக்கு மனநலம் சரியில்லை என்று ஆதங்கத்தில் தினகரன் கூறியிருக்கிறார். இனி சசிகலாவை சகோதரி என அழைக்க மாட்டேன். அவர் என்னுடைய முன்னாள் சகோதரி. சசிகலா நோட்டீஸ் அளித்ததால், எங்களுடைய அரசியல் பயணம் நின்றுவிடாது. தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்துக்குத் தினகரன்தான் காரணம்" எனப் பேசினார்.

    Why Sasikala send notices to Divakaran?

    இந்த குடும்ப மோதல் குறித்து நமக்கு கிடைத்த தகவல்களில், சசிகலாவைப் பற்றி குடும்பத்தினர் பேசும் விஷயங்களை எல்லாம், ஒவ்வொரு சிறை சந்திப்பிலும் போட்டுக் காட்டுவார் தினகரன். சிறு பத்திரிகை செய்தியாக இருந்தாலும் யூ ட்யூப் வீடியோவாக இருந்தாலும் அதையெல்லாம் ஓர் ஆதாரமாக வைத்துக் கொண்டுதான் பேசுவார். வெறுமனே குற்றச்சாட்டுகளைக் கூறாமல் ஆதாரத்தோடு பேசுவதால், அவர் சொல்வதை சசிகலாவும் கேட்டு வருகிறார். அப்படித்தான், முக்கிய நிர்வாகிகளுடனான சந்திப்பில் சசிகலாவைப் பற்றி சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் திவாகரன்.

    இதைப் படம் பிடித்த நபர், டி.டி.வியிடம் கொடுத்துவிட்டார். ஏற்கெனவே, தினகரனுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் கொதிப்பில் இருந்த திவாகரன், சசிகலாவை தாறுமாறாகப் பேசி வந்தார். இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் தினகரன்" என்றவர்,

    "திவாகரனுக்கு எதிராக வெற்றிவேல் வெளியிட்ட அறிக்கையில், ' தரக்குறைவான வார்த்தைகளில் சசிகலாவை விமர்ச்சிக்கிறார்' எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு முன்னதாகவே, திவாகரன் பேச்சுக்களைத் தொகுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. நடராஜன் இருந்தவரையில், திவாகரனுக்கு பெரிய பாதுகாப்பு இருந்தது. அவரைப் போலவே செயல்பட வேண்டும் எனவும் விரும்பினார். மறைமுக அரசியலில் இறங்குவதைத்தான் அவர் விரும்பினார். இதை தினகரன் விரும்பவில்லை. சசிகலாவைப் பொறுத்தவரையில், அவர் முன்னால் யாராவது அழுது கொண்டே பேசினால் நம்பி விடுவார். அப்படித்தான் தினகரன் சாதித்தார்.

    சசிகலாவை முன்னிறுத்தினால்தான் டெல்டா உள்பட சில இடங்களில் கணிசமான வாக்குகள் கிடைக்கும். சில தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய அளவுக்கு சமுதாய வாக்குகளும் உள்ளன. சசிகலா பெயரை முன்னிறுத்தி, இந்த வாக்குகளை திவாகரன் பிரித்துவிடக் கூடாது என நினைத்தார் தினகரன். நோட்டீஸ் வெளியிடப்பட்ட பின்னணியும் இதுதான். சசிகலாவை முன்னிறுத்தாமல், திவாகரனால் அரசியல் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. குடும்பத்தில் நடக்கப் போகும் நல்ல காரியங்களையும் இந்தத் தகராறுகள் பாதிக்கும் என்கின்றன மன்னார்குடி உறவுகள்.

    English summary
    Here are the reasons behind the Sasikala's notice to her brother Divakarn issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X