For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் இந்த தீபா?.. இது தேவையா ஓ.பன்னீர்செல்வம்?

By Chakra
Google Oneindia Tamil News

- ஏ.கே.கான்

இக்கட்டான சூழல், எந்த இடத்திலிருந்து ஆதரவு வந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அந்த வகையில் தீபாவை அவரே வலியப் போய் வழியில் சந்தித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். முதல்வரின் குடும்பமே மிக பவ்யமாக வெளியே வந்து தீபாவுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்ற கண்கொள்ளா காட்சியை பார்த்தபோது ஏற்பட்ட கடுப்பு இருக்கே...

Why should Pannerselvam give special importance to Deepa?

அதிமுகவில் உள்ள கீழ்மட்ட தொண்டர்கள், தீபா ஆதரவாளர்களின் ஆதரவை பெற பன்னீருக்கு இது உதவலாம்.

மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தான் பன்னீர் கடந்த வாரம் சிங்கமாக எழுந்தார். ஆனால், இன்று தீபாவை போய் வரவேற்று வீட்டுக்கு அழைத்து வருவதற்காக பன்னீர் அங்கு போனது இதுவரை அவர் மீது இருந்த மரியாதையில் ஒரு பகுதியை நிச்சயம் பொது மக்களிடம் இழந்துவிட்டார் என்பதே உண்மை.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் வேண்டுமானால் சசிகலாவுக்கு எதிரான தீபாவை அவர் தன் வசம் இழுத்திருக்கலாம்.

ஆனால், பொது மக்களைப் பொறுத்தவரை தீபா யார்?.. சசிகலாவுக்கு உள்ள அதே ''மரியாதையே'' தமிழக மக்களிடம் இவருக்கும் இருக்கிறது. இவருக்கும் தமிழகத்தின் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

அதிமுக என்ற கட்சியே எந்தவிதமான கொள்கைகளும் இல்லாமல் வெறும் சினிமா கவர்ச்சி, பிம்பங்களை மட்டுமே வைத்து கட்டப்பட்டு தமிழகத்தை ஆண்டு சீரழித்த கட்சி.

இதில் அதிமுகவில் உள்ள மோசமானவர்களில் கொஞ்சமாவது பரவாயில்லை என்று பார்த்து தான் பன்னீரை மக்கள் ஆதரித்துள்ளனர்.

மூத்த தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து பன்னீரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவ்வாறு நேரடியாக வீட்டுக்கு வராத தீபா, அவரை ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரவழைத்து பாதி வழியில் சந்தித்ததில் இருந்தே ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது.

தீபாவை பின்னால் இருந்து இயக்கும் கும்பல் ஒரு விஷயத்தை பன்னீருக்கும் தமிழக மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. அதாவது தீபாவும் பன்னீருக்கு இணையான மிகப் பெரிய தலைவர். அவரை ஒரு தலைவராக நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பது தான் அந்தத் தகவல்

இல்லாவிட்டால் அரசியலில் நர்சரி பள்ளிக்குக் கூட போகாத தீபா, பன்னீரை சந்தித்துவிட்டு இருவரும் இணைந்து செயல்படுவோம் என்று பேட்டி தந்திருக்க மாட்டார். அதாவது பன்னீருக்கு இணையானவள் நான் என்பதைத் தான் தீபா சொல்கிறார்.

இது பன்னீருக்கும் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் நல்லதில்லை. குறிப்பாக தமிழகத்துக்கு இது நல்லதே இல்லை.

தீபாவை ஏற்கலாம் என்றால் ஏன் சசிகலாவை அதிமுகவினர் ஏற்கக் கூடாது...? அட்லீஸ்ட் சசிகலாவாவது ஜெயலலிதாவோடு இணைந்து அரசியல் செய்தவர் ஆச்சே. இந்த தீபாவின் ஒரே தகுதி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பது மட்டுமே.

அந்த வகையில் அவருக்கு ஜெயலலிதாவின் சொத்துக்கள் வேண்டுமானால் போய்ச் சேரலாம் (ரூ. 100 கோடி அபாரத்துக்காக நீதிமன்றம் ஏலம் விடப் போகும் சொத்துக்கள போக மிச்சம் உள்ளதை)

ஆனால், தமிழகம் ஜெயலலிதாவின் ஊழல் சொத்தோ அல்லது சம்பாதித்த தனிப்பட்ட சொத்தே அல்ல. அதை தீபாவிடம் அள்ளித் தந்துவிட...

English summary
Tamil Nadu CM O.Pannerselvam need not have to give special importance to Deepa, the relative of Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X