For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை நச்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது? என தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது?- வீடியோ

    மதுரை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது? என தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    Why Tamil Nadu govt not taken policy to closing the Sterlite plant? : Madurai bench

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாக கூறி ஹைகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

    நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ள கருத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தமிழக அரசு ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பியது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும் அந்த அமர்வு கூறியது. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை என்றும் அந்த அமர்வு தெரிவித்தது.

    நிவாரணம் வழங்கி மனித உயிர்களை மதிப்பிட முடியாது. ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு ரூ.20 லட்சம் தானா? ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஹைகோர்ட் ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது.

    இதில் இருந்தே எந்த அளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது என தெரிகிறது என்றும் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்தது. மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 22 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    English summary
    High court Madurai bench raising question that Why Tamil Nadu govt not taken policy to closing the Sterlite plant? The High Court bench questioned the Tamil Nadu government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X