For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவாஜி மணிமண்டபத்தைத் திறக்க எடப்பாடி மறுத்த பின்னணி!

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என் அறிவித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், மாதங்கள் பல கடந்தும் அதில் அவர் அக்கறைக்காட்டவில்லை. முதல்வராக பன்னீர் இருந்த போது மணிமண்டப பணிகள் வேகமெடுத்தன.

குறிப்பாக திட்ட மதிப்பீடான 2 கோடியே 80 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார் பன்னீர். அதனையடுத்து மண்டப பணிகள் வேகமெடுத்து கடந்த மாதம் நிறைவு பெற்றது.

காமராஜர் கடற்கரை சாலைதில் கலைஞர் வைத்த சிவாஜி சிலையை அங்கிருந்து அகற்றி மண்டபத்தில் வைத்தனர். அதுவும் மக்களின் பார்வையில் படும்படி பிரதான சாலையின் வெளிப்புறமாக சிலையை வைக்காமல், உள்புறவாயிலில் வைக்க உத்தரவிட்டார் தற்போதைய முதல்வர் எடப்பாடி.

சிவாஜி சிலை அகற்றம்

சிவாஜி சிலை அகற்றம்

இந்தநிலையில் தான் சிவாஜியின் பிறந்தநாளான அக்டோபர் 1 ந்தேதி மண்டப்பத்தை திறக்க எடப்பாடி அரசு முடிவு செய்தது. இந்த முடிவைக்கூட சிவாஜி சமூக நலப்பேரவையின் திட்டத்தை அறிந்ததால் அரசு எடுத்தது என் கிறார்கள் செய்தி துறையினர் . நம்மிடம் பேசிய அவர்கள், " சிவாஜியின் பிற்ந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது சிவாஜி குடும்பம், சிவாஜி சமூகநலப்பேரவை, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் என பலரும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வர். சிவாஜிக்கென்று இருந்த அந்த சிலையையும் அகற்றிவிட்டதால் சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1 -ந்தேதி எங்கு சென்று சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துவது? என யோசித்தனர்.

அரசு உடனடி முடிவு

அரசு உடனடி முடிவு

மண்டபம் திறந்தால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். ஆனால், மண்டபத்தை திறக்கும் யோசனை அரசுக்கு இருப்பதாகவே தெரியவில்லை என்பதால் அக்டோபர் 1-ந்தேதி மண்டபம் அமைந்துள்ள அடையாறு சாலையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என சிவாஜி சமூக நலப்பேரவைதினர் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். இதனை அறிந்த அரசு, மண்டபத்தை திறக்க முடிவு செய்தது" என்றனர்.

சசிகலா உறவினர்

சசிகலா உறவினர்

மண்டபத்தை முதல்வர் திறந்து வைப்பதாகத்தான் முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென்று அந்த முடிவை கைவிட்டார் முதல்வர். இத்குறித்து நாம் விசாரித்தபோது, " சசிகலாவின் சம்மந்தி தான் சிவாஜி குடும்பம். சசிகலா குடும்பத்தினரோடு நெருங்கிய தொடர்பில் தான் சிவாஜி குடும்பம் இருந்து வருகிறது. சசிகலாவை வெறுக்கும் எடப்பாடி, சசிகலாவை ஆதரிக்கும் சிவாஜி குடும்பத்தினரையும் வெறுக்கிறார்.

சிவாஜி குடும்பம் விரும்பவில்லை

சிவாஜி குடும்பம் விரும்பவில்லை

மேலும், எடப்பாடி முதல்வரானதையடுத்து நடிகர் சங்கத்தினர் பலமுறை அவரை சந்தித்தனர். இந்தசந்திப்புகளில் பிரபு கலந்துகொள்ளவில்லை. இது குறித்து எடப்பாடி ஒருமுறை விசாரித்தபோது, தம்மை சந்திக்க சிவாஜி குடும்பம் விிரும்பவில்லை என்பதையறிந்துகொண்டார். இதுவும் அவருக்கு சிவாஜி குடும்பத்தினர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.

சென்டிமெண்ட் காரணம்

சென்டிமெண்ட் காரணம்

இதற்கிடையே, எடப்பாடி கலந்துகொள்ளும் ஒவ்வொரு விழாவினையும் அவரது குடும்பத்தினர் தங்களின் குடும்ப ஜோதிடர்களிடம் ஆலோசிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அந்த ஆலோசனைபடியே விழாவில் எடப்பாடி கலந்துகொள்வது முடிவு செய்யப்படுக்கிறது என்று கூறப்படுகிறது. அந்தவகையில், சிவாஜி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என ஜோதிடர்களின் அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இத்தகைய காரணங்களால்தான் மண்டபத்தை திறக்க மறுத்துள்ளார் எடப்பாடி" என பின்னணிகளை சுட்டிக்காட்டினார்கள் செய்தி துறையினர்.

English summary
Do you know why TN CM refused to inaugurate Sivaji Ganesan's memorial?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X