For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் 8 வழி சாலை பற்றி கருத்து கேட்க அன்புமணிக்கு ஏன் அனுமதி மறுப்பு? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சேலம் பசுமை வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் எம்.பி அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சேலம் பசுமை வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் எம்.பி அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

Why TN Gov not allowing MP Anbumani to ask people view on Salem 8 way Project asks HC

இந்த நிலையில் 8 வழி சாலை பிரச்சனை குறித்து தருமபுரி மக்களிடம் கருத்து கேட்க அந்த தொகுதி எம்.பி அன்புமணி முடிவெடுத்தார். ஆனால் அவர் தொகுதிக்கு வருவதற்கு முன்பே அங்கு பல போலீசார் குவிக்கப்பட்டார்கள். அங்கு சென்ற எம்.பி அன்புமணிக்கு போலீஸ் அனுமதி மறுத்தது.

தருமபுரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீஸ் அவரிடம் கூறியுள்ளது. மேலும் பாப்பிரெட்டிபட்டியில் கருத்து கேட்புக் கூட்டத்துக்கும் அனுமதி இல்லை என்று போலீஸ் கூறியுள்ளது.

இந்த விஷயத்தில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் அன்புமணி முறையிட்டதை அடுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தர்மபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன், அவர் அந்த தொகுதி எம்.பி. அவருக்கு அங்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த அனுமதி இருக்கும் போது, அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

English summary
Why TN Gov not allowing MP Anbumani to ask people view on Salem 8 way Project asks HC after Police detained MP Anbumani from Dhramapuri. Later the day he has planned to get people's voice on the project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X