For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னார்குடி பரம்பரையில் முதல் எம்எல்ஏ: பட்ஜெட்டில் பங்கேற்பதை தவிர்த்தது ஏன்?

மன்னார்குடி பரம்பரையில் முதல் எம்எல்ஏவான தினகரன் தமிழக பட்ஜெட்டில் பங்கேற்காமல் இருந்தது ஏன்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அம்மா முன்னேற்றகழகம் ஆட்சியை பிடிக்கும்- டிடிவி தினகரன்- வீடியோ

    சென்னை: மன்னார்குடி பரம்பரையில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரன் பட்ஜெட் கூட்டத்

    சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தினகரன் தனது கையில் 18 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க நினைத்தார். ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவையும் , இரட்டை இலையையும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக கைப்பற்றியது.

    இதைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் தினகரன். அதிமுகவு, தினகரன் அணியும் பரஸ்பரம் டெபாசிட் வாங்கமாட்டார்கள் என்று கூறி கொண்டன. எனினும் இந்த தேர்தலில் ஆளும் கட்சியையே ஆச்சரியப்படுத்தும் வகையில் தினகரன் பெருவாரியான வாக்குகளை பெற்றார்.

    மன்னார்குடியில் முதல் எம்எல்ஏ

    மன்னார்குடியில் முதல் எம்எல்ஏ

    மன்னார்குடியில் முதல் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றார் தினகரன். அதன் பின்னர் 2018-ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் தினகரன் கலந்து கொண்டார். அப்போது அந்த அவையில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதை வைத்து தினகரன் ஆதரவாளர்கள் டிடிவி வருவதை அறிந்து சட்டசபையே காலியாக உள்ளது என்று கூறினர்.

    குனிந்து சிரிக்கிறார்கள்

    குனிந்து சிரிக்கிறார்கள்

    இதுகுறித்து எம்எல்ஏ தினகரன் கூறுகையில் என்னை நேருக்கு நேர் பார்க்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு சங்கடம் ஏற்பட்டது. இன்னும் சிலருக்கு பயமும் உள்ளது. இதனால் என்னை பார்த்து நேரடியாக சிரிக்காமல் குனிந்து கொண்டு சிரிக்கிறார்கள் என்று தினகரன் தெரிவித்திருந்தார்.

    பட்ஜெட் தாக்கல் செய்தல்

    பட்ஜெட் தாக்கல் செய்தல்

    இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதில் தினகரன் பங்கேற்கவில்லை. அதற்கு மாறாக மதுரையில் தனது தனி அணியை அறிவித்தார். எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பட்ஜெட், மேலும் ஆர்கே நகர் என்பது மீனவ மக்கள் அதிகம் உள்ள தொகுதி, இதில் அந்த தொகுதி எம்எல்ஏ கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அனைத்து கட்சி கூட்டம்

    அனைத்து கட்சி கூட்டம்

    பட்ஜெட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று தினகரன் நினைத்திருந்தால் அவர் வேறு ஒரு நாளில் தனது கட்சி குறித்த அறிவிப்பை அறிவித்திருக்கலாம். ஆனால் பட்ஜெட் இன்று நடைபெறுகிறது என்று தெரிந்தே இதுபோல் தினகரன் செய்வது எந்த விதத்தில் நியாயம். ஜெயலலிதா சிலை திறப்பு விவகாரத்தில் அவசர அவசரமாக சிலையை தப்பும் தாளமுமாக திறந்தது ஏன் என்றும் இதற்கு பதில் சிலையை நன்கு ஆராய்ந்து வேறு ஒரு நாளில் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசுக்கு உபதேசம் செய்தவர்தானே தினகரன்.

    தினகரன் அதிருப்தி

    தினகரன் அதிருப்தி

    ஒரு வேளை காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு தனக்கு அழைப்பில்லை என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடரில் தினகரன் பங்கேற்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியிருந்தாலும் அனைத்து கட்சி கூட்டம் என்பது வேறு, பட்ஜெட் என்பது வேறு என்பதை அறியாதவரா தினகரன் என்ற கேள்வியும் முந்திக் கொள்கிறது. எது எப்படியோ வீம்புக்காக மக்கள் பிரச்சினை சார்ந்த விவகாரங்களில் தினகரன் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

    English summary
    Why Dinakaran not participates in Budget Session? He announces the party name in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X