For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரில் ஏறி உட்கார்ந்ததுமே பொலபொலவென்று விஜயகாந்த் கண்ணிலிருந்து கொட்டிய தண்ணீர்...!!

Google Oneindia Tamil News

சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வரை குடும்பத்தோடு போயும், பதவியேற்பு விழாவில் விஜயகாந்த் போகாமல் விட்டதற்கான ஒரு பரபரப்புக் காரணத்தை அவரது கட்சியினர் கூறியுள்ளனர்.

மச்சான் சுதீஷுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற விசனத்தில்தான் பதவியேற்பு விழாவுக்குப் போகாமல் விஜயகாந்த் புறக்கணித்து விட்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் அவர் ஏன் போகவில்லை என்பது குறித்து தேமுதிக தரப்பைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பான காரணத்தைக் கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்து அவர் கூறியுள்ள காரணம் இதோ....

இணை அமைச்சர் பதவியாவது....

இணை அமைச்சர் பதவியாவது....

எங்கள் கட்சிக்கு ஒரு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வழங்கப்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும் பதவியேற்பு விழாவுக்குப் போவது என்று விஜயகாந்த் முடிவு செய்தார்.

காரில் கிளம்பினார் விஜயகாந்த்

காரில் கிளம்பினார் விஜயகாந்த்

பதவியேற்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து விஜயகாந்த், மனைவி பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் புறப்பட்டார்.

கிளம்பும் நேரம் பார்த்து...

கிளம்பும் நேரம் பார்த்து...

காரில் விழாவுக்கு புறப்பட இருந்த நேரம் பார்த்து திடீரென விஜயகாந்த் கண்ணில் இருந்து அதிக அளவு கண்ணீர் வந்தது.

சிவந்த கண்கள்.. திறக்கக் கூட முடியலையே...

சிவந்த கண்கள்.. திறக்கக் கூட முடியலையே...

இதனால் அவர் கண் சிவந்து மிகவும் அவதிப்பட்டார். மேலும் கண்ணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை.

இதுதாங்க காரணம்...

இதுதாங்க காரணம்...

இதுதான் காரணம். மற்றபடி விஜயகாந்த் போகாமல் இருந்ததற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை என்றார் அந்த கட்சிக்காரர்.

கண் நோயாக இருக்குமோ....?

கண் நோயாக இருக்குமோ....?

விஜயகாந்த்துக்கு கண்ணில் என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. இப்படித்தான் வாக்குப் பதிவின்போது கூட அவர் வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பார்த்து தடுமாறினார். அவரது மனைவி பிரேமலதா வந்து வாக்குப் பதிவு இயந்திரத்தைச் சுட்டிக் காட்டி விஜயகாந்த்துக்கு உதவினார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல மோடியைச் சந்தித்தபோது கூட அவர் தடுமாறி அவர் மீதே விழுந்தார். பிறகு தனது கண்ணைக் காட்டி மோடியிடம் ஏதோ சொன்னார் விஜயகாந்த்.

டெல்லியில் இன்னும் 2 நாட்கள் இருப்பாராம் விஜயகாந்த். பேசாமல் நல்ல கண் டாக்டரிடம் காட்டி செக்கப் செய்து கொள்வது நல்லது!.

 முன் சீட்டில் இடம் கொடுக்காததும் ஒரு காரணமாம்

முன் சீட்டில் இடம் கொடுக்காததும் ஒரு காரணமாம்

இதற்கிடையே, கேப்டன் விஜயகாந்த் டெல்லி போயும், பதவியேற்புக்குப் போகாதது குறித்து வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள் டெல்லி வட்டத்தில். அதாவது பதவியேற்பு விழாவில், முன்வரிசையில் விஜயகாந்த்துக்கு சீட் ஒதுக்கப்படவில்லையாம். இதுவும் கூட கடைசி நேரத்தில்தான் விஜயகாந்த்துக்குத் தெரிய வந்ததாம். இதனால் அவர் அப்செட்டாகி விட்டாராம்.

பாஸ் கூட கம்மியாம்லய்யா

பாஸ் கூட கம்மியாம்லய்யா

அதேபோல விஜயகாந்த் கட்சியினருக்கு விழா பாஸ் கூட குறைந்த அளவில்தான் தரப்பட்டதாம். இதுவும் கூட விஜயகாந்த்தை அப்செட் ஆக்கி விட்டதாம்.

மோடியைப் பார்க்காமல் வர மாட்டாராம்

மோடியைப் பார்க்காமல் வர மாட்டாராம்

தொடர்ந்து டெல்லியில் தங்கியுள்ள விஜயகாந்த், மோடியைச் சந்தித்துப் பேசத் தி்ட்டமிட்டுள்ளாராம். சந்தித்த பின்னர்தான் திரும்புவதாக உள்ளாராம்.

English summary
DMDK leader Vijayakanth avoided Modi swearing in due to some infection in his eyes, says his party functionary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X