For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் விழுந்தடித்துக் கொண்டு உளுந்தூர்ப்பேட்டைக்கு ஓடியது ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு தொகுதியாக மாறிக் கொண்டிருக்கிறார். இதற்கான காரணம் கேட்டால் கிராமம் பிடிக்கும், அதனால்தான் மாறுகிறேன் என்கிறார் சம்பந்தமே இல்லாமல்.

ஆனால் உண்மையில் விஜயகாந்த் தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாற முக்கியக் காரணமே, மீண்டும் பழைய தொகுதியில் போட்டியிட்டால் படு தோல்வி அடையக் கூடிய வகையில் அங்கு அவருக்கு கெட்ட பெயர் நிலவுகிறது என்பதால்தான்.

நக்கீரன், ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால் இதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

விருத்தாச்சலம்

விருத்தாச்சலம்

விஜயகாந்த் முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி விருத்தாச்சலம். 2006 தேர்தலில் இங்கு அவர் போட்டியிட்டு வென்றார். இங்கு தற்போது தேமுதிகவின் ஆதரவு என்ன தெரியுமா.. ரொம்பக் கேவலமாக இருக்கிறது.

6 - 20

6 - 20

நக்கீரன் கருத்துக்கணிப்பில் தேமுதிகவுக்கு 6 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. 4வது இடத்தில் இருக்கிறது தேமுதிக. நோட்டாவை விட 2 சதவீத ஆதரவு அதிகம், அவ்வளவுதான். ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் தேமுதிக 20 சதவீத ஆதரவுடன் 3வது இடத்தில் உள்ளது. கொஞ்சம் விட்டால் பாமக இக்கட்சியை விஞ்சி விடும்.

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம்

அடுத்து ரிஷிவந்தியம். இந்தத் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் வென்று ஜெயித்தார். அதிமுக துணையுடன் வென்ற தொகுதி இது. இப்போது இங்கு தேமுதிகவின் ஆதரவு என்ன தெரியுமா..

15 -13

15 -13

நக்கீரன் கருத்துக் கணிப்பின்படி தேமுதிகவுக்கு 15 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இங்கு திமுக 52 சதவீத ஆதரவுடனும், அதிமுக 30 சதவீத ஆதரவுடனும் உள்ளது. விகடன் கருத்துக் கணிப்பின்படி இங்கு திமுகவுக்கு 41, அதிமுகவுக்கு 36, தேமுதிகவுக்கு 13 சதவீதம் என ஆதரவு உள்ளது.

உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்ப்பேட்டை

தற்போது அவர் உளுந்தூர்ப்பேட்டைக்கு மாறி வந்துள்ளார். இங்கு நக்கீரன் கணிப்புப்படி தேமுதிகவுக்கு 30 சதவீத ஆதரவு உள்ளது. 2வது இடத்தில் திமுக 27, 3வது இடத்தில் அதிமுக 26 என உள்ளன. இதை விஜயகாந்த்துக்குச் சாதகம் என சொல்ல முடியாது. இழுபறிதான். சற்று முயற்சித்தால் திமுக அல்லது அதிமுக வென்று விடும் அபாயம் உள்ளதை மறுக்க முடியாது. மேலும் பாமக வேறு 11 சதவீத ஆதரவுடன் நிற்கிறது.

விகடன் கணிப்புப்படி 3வது இடம்தான்

விகடன் கணிப்புப்படி 3வது இடம்தான்

அதேசமயம், ஜூனியர் விகடன் கணிப்புப் படி பார்த்தால் விஜயகாந்த்துக்கு இங்கு 3வது இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 24, திமுக 27, முரசு 23, பாமக 20 சதவீத ஆதரவுடன் இங்கு உள்ளன. இங்கும் கூட பாமக சற்று முயற்சித்தால், விஜயகாந்த்தை 4வது இடத்திற்கு தூக்கி அடித்து விட முடியும் என்பது முக்கியமானது.

ஜெயித்தால் மட்டும் போதுமா?

ஜெயித்தால் மட்டும் போதுமா?

விஜயகாந்த் இதற்கு முன்பு ஜெயித்த இரு தொகுதிகளிலும் அக்கட்சி மோசமான நிலையிலேயே உள்ளது. விஜயகாந்த் என்ற ஈரப்பால் அங்குள்ளவர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஜெயித்த தொகுதிக்கு விஜயகாந்த் எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அங்கு அதிருப்தி தாண்டவமாடுகிறது. இதனால்தான் தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறிக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

English summary
The reason behind the Vijayakanth's shifting of seats in each election is losing the voters' support in the constituencies after the polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X