For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கிய இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

By Mathi
Google Oneindia Tamil News

vigneswaran
திருச்சி: தமிழ்நாடு வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றிரவு திருச்சி அருகேயுள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் சென்னையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இலங்கையின் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதற்காக நேற்று சென்னை வந்த விக்னேஸ்வரன் கார் மூலமாக திருச்சி சென்றடைந்தார். பின்னர் விராலிமலையில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்துக்குச் சென்ற அவர் சிவன் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு ஓய்வெடுத்தார்.

பிரேமானந்தா ஆசிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி வழிபாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கம். வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தற்போது தான் முதல் முறையாக அவர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார் என்றனர் ஆசிரம நிர்வாகிகள்.

English summary
Chief Minister of Sri lanka Northern Province C.V. Wigneswaran stayed Trichy Premananda Ashram on yesterday. He will deliver a lecture on civil liberties in South Asia at an event organised by the People's Union for Civil Liberties (PUCL) in Chennai on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X