For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் தன்னை சீண்டிய இளைஞரை கோபத்தோடு துரத்திய யானை - ஷாக் வீடியோ

கோவை தடாகம் அருகே தன்னை சீண்டிய இளைஞரை ஆக்ரோஷத்தோடு காட்டு யானை ஒன்று துரத்தி உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    யானையைச் சீண்டும் இளைஞர்கள்-ஷாக் வீடியோ

    கோவை : கோவை அருகே தடாகம் பகுதியில் காட்டு யானையை இளைஞர்கள் சீண்டியதால், அவர்களை யானை கோபத்தோடு துரத்தும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டி இருப்பதால், யானைகள் நடமாட்டம் இங்கு அதிகம். அடிக்கடி ஊருக்குள் யானைகள் வருவது உண்டு.

    Wild Elephant chased an Young Man aggressively who taunted Him at Coimbatore

    இந்நிலையில், நேற்று வழி தவறி செங்கல் சூளை ஒன்றின் அருகே வந்த யானையை இளைஞர் ஒருவர் சீண்டி உள்ளார். இதனால் கோபமடைந்த யானை அவரை ஆக்ரோஷமாக துரத்தியது. அவரை துரத்தியபடி செங்கல் சூளை கூரைக்குள் வரும் யானை, ஒரு கட்டத்திற்கு அந்த இளைஞரை துரத்த முடியாமல் நின்றுவிடுகிறது.

    இதனால், அந்த இளைஞரை மீண்டும் அந்த யானை அருகே சென்று அதை சீண்டுவதால் கோபமாக பிளிறியபடி அவரை துரத்த முனைகிறது. ஆனால், தாழ்வான கூரை பகுதியில் சிக்கி கொண்டதால், அதனால் துரத்த முடியவில்லை. இந்த சம்பவத்தை வேறொரு இளைஞர் தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்தப்பகுதிக்கு வரும் யானைகளை இளைஞர்கள் சிலர் தேவை இல்லாமல் சீண்டுவதால் கோபமடையும் யானைகள் வழியில் செல்வோரை தாக்கின்றன என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    சமீபத்தில் இதுபோன்று யானையை சீண்டிய இளைஞர்களைப் பிடித்த வனத்துறை அவர்களுக்கு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் விலங்கு மற்றும் மனிதர்களிடையே மோதல் போக்கை உருவாக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

    English summary
    Wild Elephant chased an Young Man aggressively who taunted Him at Coimbatore. The Video of the elephant chasing the young man went viral on Social medias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X