For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் மூக்கை நுழைக்கும் சு.சாமி.. ராசாவின் மாஜி உதவியாளரை பாஜக வேட்பாளராக்க முயல்கிறார்!

Google Oneindia Tamil News

திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்று சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்ததால் காலியாகியுள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அத்தொகுதியில் பாஜக சார்பில் ஆசிர்வாதம் ஆச்சாரி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆச்சாரி வேறு யாருமல்ல, முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முன்னாள் உதவியாளராக இருந்தவர். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவுக்கு எதிராக திரும்பியவரும் கூட. கனிமொழி, ராசாவுக்கு எதிராக வலுவான சாட்சியம் அளித்தவரும் கூட

இவர் ராசாவுக்கு திரும்பியதுமே, சுப்பிரமணியம் சாமி பக்கம் வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜகவிலும் சேர்ந்துள்ளார் ஆச்சாரி.

அரசியல் வியூகக் குழு உறுப்பினர்

அரசியல் வியூகக் குழு உறுப்பினர்

சாமியின் சிபாரிசால் பாஜகவில் சேர்ந்த ஆச்சாரி தற்போது அரசியல் வியூகக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

திருச்சிதான் சொந்த ஊர்

திருச்சிதான் சொந்த ஊர்

ஆச்சாரிக்கு திருச்சிதான் சொந்த ஊராகும். பல வருடமாக மத்திய அரசுப் பணியில் இருந்தவர். கடைசியாக ராசாவுக்கு முதுநிலை உதவியாளராக இருந்தார். அதன் பின்னர் ரயில்வே அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர் ராஜினாமா செய்து விட்டு சாமி வழியாக பாஜகவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.

2ஜி வழக்கில் முக்கிய சாட்சி

2ஜி வழக்கில் முக்கிய சாட்சி

ஆச்சாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுத் தரப்பில் முக்கிய சாட்சியாக இருக்கிறார். இவர் ராசாவின் டீல்கள் குறித்து பல முக்கியத் தகவல்களை சிபிஐ கோர்ட்டில் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார் என்பதும் முக்கியமானது.

கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்தியவர்

கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்தியவர்

இந்த ஆச்சாரி கலைஞர் டிவியின் முக்கிய மூளையாக திகழ்வதே கனிமொழிதான் என்றும் வாக்குமூலம் அளித்து கனிமொழிக்கு எதிரான வழக்கையும் வலுப்படுத்தியவர். ஆச்சாரியின் இந்த வாக்குமூலத்தை மேற்கோள் காட்டித்தான் முன்பு டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் அளிக்க மறுத்தது என்பதும் நினைவிருக்கலாம்.

களம் இறக்க சாமி மும்முரம்

களம் இறக்க சாமி மும்முரம்

தற்போது ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆச்சாரியை பாஜக வேட்பாளராக களம் இறக்க சாமி மும்முரமாக முயன்று வருகிறாராம். ஆனால் தமிழக பாஜக தரப்பில் அதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை.

யாருன்னே தெரியலையே

யாருன்னே தெரியலையே

ஆச்சாரி குறித்து திருச்சி பாஜகவிலேயே யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒருவர் எங்க கட்சியில், அதுவும் எங்க ஊரில் இருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.

சாமி முயற்சி பலிக்குமா.. ஆச்சாரி ஸ்ரீரங்கம் வேட்பாளராவா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

English summary
Sources say that Subramaniam Swamy is trying to make Ashirvadam Achary to make BJP candidate in Sri Rangam by election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X