For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பொறுக்கி" சாமியின் கருத்து பாஜகவுடையதா?.. விளக்குவார்களா தமிழிசை, பொன் ராதா, எச்.ராஜா??

Google Oneindia Tamil News

சென்னை: "பொறுக்கி" சுப்பிரமணியம் சாமி, தமிழர்களை மீண்டும் பொறுக்கி என்று கூறி விஷம் கக்கியுள்ளார். அவருடைய கருத்தை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்பியுள்ளனர்.

"பொறுக்கி" சாமி தமிழர்களை எப்போதுமே அன்புடன் "பொறுக்கி" என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு இதுவரை தமிழ்நாட்டு மக்கள் பெரிய அளவில் ரியாக்ஷன் காட்டாமல் உள்ளனர் என்ற ஒரே காரணத்தால் தொடர்ந்து அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Will BJP clear whether it supports Swamy's Tweet on TN Fisherman's death?

தற்போதும் கூட இலங்கை கடற்படைக் காடையர்களால் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட கொடும் செயலைக் கண்டு மக்கள் கொதித்துள்ள நிலையில் அதையும் கிண்டலடித்துள்ளார் "பொறுக்கி" சாமி.

இந்த "பொறுக்கி" சாமி போட்டுள்ள ஒரு டிவீட்டில் கட்டுமரங்களை எடுத்துக் கொண்டு போய் இலங்கைப் படையுடன் தமிழ்நாட்டுப் "பொறுக்கிகள்" போரிடட்டும் என்று "பொறுக்கி" சாமி போட்டுள்ளார்.

இப்படி அடிக்கடி "பொறுக்கி" சாமி இப்படி தொடர்ந்து "பொறுக்கி பொறுக்கி" தமிழ்நாட்டு மக்களை வர்ணித்து வருதற்கு எந்த பாஜக தலைவரும் கண்டனமோ, எதிர்ப்போ, கருப்புக் கொடி காட்டி போராட்டமோ நடத்தியதில்லை. குறைந்தபட்சம் பிரதமரிடம் போய் மனு கொடுத்து எதிர்ப்பைக் கூட காட்டியதில்லை.

ஆனால் தமிழக மீனவர் ஒருவர் செத்துக் கிடக்கும் நிலையிலும் அதையும் கிண்டிலடித்து டிவீட் போட்டிருக்கும் "பொறுக்கி" சாமியின் கருத்தை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா என்று தமிழக மக்கள் கேட்கிறார்கள். இதற்கு தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா, இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நிர்மலா சீனிவாசன் போன்ற பாஜகவின் அரும் பெரும் தலைவர்கள் பதிலளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary
The big question is that, will BJP clear whether it supports Swamy's Tweet on TN Fisherman's death or not?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X