For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்டீன்னா தமிழக டிரைவர்கள் வசதிக்காக வட மாநில மைல் கற்களில் தமிழில் எழுதுவாங்களா ராதா சார்??

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி மட்டுமே தெரிந்த லாரி டிரைவர்களின் நலனுக்காகவே இந்தியில் மைல் கற்களில் எழுவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இதைக் சொன்ன அவருகேக கூட சிரிப்பு வந்திருக்கும்.

இந்தியை அவர் ஆதரிக்கட்டும்.. அதை யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் இப்படியெல்லாம் பீலா விட்டு பேசுவது அவருக்கு அழகா என்ற கேள்விதான் எழுகிறது.

Will centre install Tamil milestones in Northern states?

அவர் வாதப்படியே இந்தி மட்டுமே தெரிந்த லாரி டிரைவர்களுக்காக மைல் கற்களில் இந்தியில் எழுதுவதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவரிடம் கேட்க நமக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது.

தமிழ் மட்டுமே தெரிந்த லாரி டிரைவர்களின் நலனுக்காக வட மாநில மைல் கற்களில் தமிழில் எழுதுவார்களா

அதேபோல தென்னிந்திய மொழிகளை மட்டுமே அறிந்த அந்தந்த மாநில லாரி டிரைவர்களின் வசதிக்காக அவரவர் மொழிகளில் வட மாநில மைல்கற்களில் எழுதுவார்களா

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே சலுகை கொடுக்கத் துடிக்கும் பொன் ராதாகிருஷ்ணன், அதே சலுகையை பிற மாநில மொழிகளுக்கும் கொடுக்க பரிந்துரைப்பாரா

இதற்கெல்லாம் கூட பொன் ராதாகிருஷ்ணன் பதில் சொல்ல வேண்டும்.. இதை நாம் கேட்கவில்லை, சமூக வலைதளங்களில் போய்ப் பார்த்தாலே தெரியும், மக்கள் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருப்பதை.

English summary
Union minister Pon Radhakrishnan has said that for the sake of Hindi speaking lorry drivers, the centre is placing Hindi milestones So, the question has arisen, will centre install Tamil milestones in Northern states for the sake of Tamil speaking drivers?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X