புதிய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்... தமாகா காலத்தில் காங்கிரஸைக் காப்பாற்றியவர்!
சென்னை: தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக சோனியா காந்தியால் இன்று நியமிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக, திமுக எதிர்ப்பாளர் மட்டுமல்ல, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிக நெருக்கடியான சூழலில் இருந்த போது அதனைக் காப்பாற்றியவரும் கூட.
கோஷ்டி அரசியலுக்குப் பெயர் பெற்ற தமிழக காங்கிரஸின் தலைவராக இருந்த பிஎஸ் ஞானதேசிகன் பதவி விலகிய நிலையில், அந்தப் பதவிக்கு திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், மாணிக் தாக்கூர் ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபட்டன.

ஆனால் எந்த யூகங்களுக்கும் இடம்தராமல் உடனடியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பெயரை காங்கிரஸ் மேலிடம் இன்று அறிவித்துவிட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பாரம்பர்யம் மிக்கவர். பெரியாரின் பேரன் என்ற சிறப்பும் அவருக்குண்டு.
தொண்டர்களை அரவணைத்துச் செல்வதில் இப்போதுள்ள காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரைக் காட்டிலும் சிறந்தவர் என்று பெயரெடுத்தவர்.
தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.,க மற்றும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சிப்பவர். திராவிட கட்சித் தலைவர்களுக்கு இணையான பேச்சு திறன் கொண்ட அவர், தமிழ் மாநில காங்கிரஸ் செல்வாக்குடன் இருந்த காலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்து கட்சியைக் காப்பாற்றியவர். பின்னர் தமாகாவும் காங்கிரஸும் ஒன்றிணைந்த போது, அதற்கு விலையாக தன் தலைமைப் பதவியைத் தந்தார்.
அதன் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றபோது, மத்திய அரசியல் வர்த்தகத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.
தமிழகத்தில் மக்கள் செல்வாக்குள்ள நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருடன் நல்ல நட்பில் இருப்பவர் இளங்கோவன்.
தமிழகத்தில் காங்கிரஸைத் தேட வேண்டியிருந்த சூழலில் தமிழக காங்கிரஸின் தலைவராக மீண்டும் இளங்கோவன் நியமிக்கப்பட்டிருப்பது, கோஷ்டி அரசியல் தாண்டி அக்கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுத் தருவாரா இளங்கோவன்? தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போதே கூட்டணிக் கணக்குகளை இறுதி செய்யும் முனைப்பிலுள்ள மாநிலக் கட்சிகளுடன் என்ன மாதிரி போக்கை கடைப் பிடிக்கப் போகிறார் ஈவிகேஎஸ்?
-இவைதான் இப்போதைக்கு ஈவிகேஎஸ் முன் உள்ள கேள்விகள்!
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications